Sustainability at CDB

CDB இன் வியாபார தந்திரோபாயத்தில் நிலைபேறான பணிச் செயன்முறை முக்கியத்துவம் பெறுகின்றது. இலங்கையின் முன்னணி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனம் எனும் வகையில், சமூகத்தில் பரந்தளவு வாடிக்கையாளர்களை கொண்டுள்ள நிலையில், எமது நிலைபேறாண்மை நிகழ்ச்சி நிரலில், சூழலை பாதுகாத்து மற்றும் சமூகத்தை மேம்படுத்தி எமது பங்காளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பில் மூன்று பிரிவுகளில் நாம் அதிகம் கவனம் செலுத்துகின்றோம்

CDB இன் நிலைபேறாண்மை முப்பிரிவுகள், மக்கள், இலாபம் மற்றும் புவி ஆகிய மூன்று பிரிவுகளில் பெறுமதியை சேர்ப்பதில் கவனம் செலுத்தி, சமூக உள்ளடக்கம், வளங்கள் வினைத்திறன் மற்றும் குறைந்த காபன் வெளியீடு என்பவற்றில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது.

எமது நிறுவனத்தின் சகல பிரிவுகளிலும், சகல செயற்பாடுகளிலும் சமூக, சூழல் மற்றும் பொருளாதார ஆரோக்கியம் தொடர்பில் கவனம் செலுத்துவதனூடாக, சிறப்புக்கான நிலைபேறாண்மை தந்திரோபாயங்கள் மற்றும் முன்னுரிமைகள் ஆகியன அடங்கிய நிலைபேறாண்மை தத்துவம் மேம்படுத்தப்பட்டுள்ளது. தலைவர்களாக செயலாற்றுவதற்கு அவசியமான வளர்ச்சி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது மற்றும் அறிவுப் பகிர்வு போன்றவற்றினூடாக சமூக அடிப்படையிலான நிலைபேறாண்மையை பின்பற்றுவதனூடாக முன்மாதிரியாக திகழ்வதற்கு நாம் முயற்சிக்கின்றோம். வாடிக்கையாளர் பல்வகைமையின் காரணமாக, எமது வியாபார மாதிரி “நகர நிதியளிப்பு மற்றும் கிராமிய கடன் வழங்கல்” என்பதாக அமைந்துள்ளது. மக்களின் வாழ்க்கைக்கு வளமூட்டும் வகையில் நிலைபேறான செயன்முறைகளினூடாகவும், கிராமிய பொருளாதாரத்தின் கீழ் மட்டத்தை சென்றடைந்து தேறிய கடன் வழங்குநராக திகழ்வதனூடாக நிதிச் சேவைகள் துறையில் ஒப்பற்ற முன்னோடியாக திகழ்வதனூடாகவும், நிலைபேறான செயன்முறைகளில் இந்த மாதிரியை உள்வாங்க எதிர்பார்க்கின்றோம். பொருளாதார பெறுமதியை சேர்த்து உறுதியான நிதி நிலைக்கு கைகொடுக்கும் சமநிலையான வியாபார மாதிரியை நாம் உறுதி செய்கின்றோம். எமது மக்களுக்கு ஆதரவளிப்பதனூடாக, செயற்பாட்டுக்கான திறனை உருவாக்குவது மற்றும் ஆற்றலுக்கு ஊக்கமளிப்பதனூடாக, ஆரோக்கியமான சமூகங்களை கட்டியெழுப்ப எதிர்பார்ப்பது மாத்திரமன்றி, பிரத்தியேக வளர்ச்சி, இணைப்பு மற்றும் புத்தாக்கத்தை மேம்படுத்தவும் எதிர்பார்க்கின்றோம்.

Sustainability

 

நிலைபேறாண்மை நோக்கு

மக்கள், இலாபம் மற்றும் புவி ஆகிய முப் பரிமாணங்களில் பெறுமதியை ஏற்படுத்துவதனூடாக, சமூக உள்ளடக்கம், வளங்கள் வினைத்திறன் மற்றும் பூஜ்ஜிய காபன் வளர்ச்சி ஆகியன மீதான அர்ப்பணிப்பு

நிலைபேறாண்மை தந்திரோபாயம்

எமது பங்காளர்களுக்கு அதிகரித்த பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், CDB இன் நிலைபேறாண்மை தந்திரோபாயம் என்பது எமது சூழலில் விடுவிப்பை குறைப்பதாக அமைந்திருப்பதுடன், ஆளுகை தொடர்பில் உயர் நியமங்களை பேணுவதாக அமைந்திருப்பதுடன், நீண்ட கால பெறுமதியை ஏற்படுத்தி செயற்படுவதற்கான எமது சமூக அனுமதிப் பத்திரத்தை பேணுவதாகும்.

நிலைபேறாண்மை முன்னெடுப்புக் குழு

எமது நிறுவனத்தின் நிலைபேறாண்மை நிகழ்ச்சி நிரலை மேற்பார்வை செய்வதுடன், ஆளுகை மற்றும் கண்காணிப்பு விடயங்களுக்கு ஆதரவளிக்கும் பணிகளை இந்தக் குழு மேற்பார்வை செய்கின்றது. எமது வியாபார செயற்பாடுகளை நேர்மையான மற்றும் பொறுப்பு வாய்ந்த வகையில் நாம் முன்னெடுப்பதுடன், வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இலஞ்சம் மற்றும் ஊழல் அடங்கலான நிதி மோசடி தொடர்பில் நாம் ஒருபோதும் சகிப்புத் தன்மையை கொண்டிருப்பதில்லை. மேலும், பொறுப்பு வாய்ந்த நிதியளிப்பு மற்றும் நிதிசார் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பது போன்றவற்றை எமது நிலைபேறாண்மை அர்ப்பணிப்பின் அங்கமாக முன்னெடுப்பதற்கு நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.

 

சமூக பொறுப்புணர்வு

Our social value creation which is the springboard to take our next steps in sustainable development best practices, ensuring that we create an empowering environment for our people and customers. Partnering our valued business partners to ensure that while we grow our business, they too will see growth in theirs as a result of our association and in being a corporate steward to the community, being responsive to their needs and imbuing development into communities.

Sustainability at CDB Bank

  • சிறுவர் சுகாதாரம் மற்றும் நலன் – ஒட்டிசம் தொடர்பில் ஆரம்பத்திலேயே செயலாற்றுவது
  • சிறுவர் கல்வி மற்றும் எழுத்தறிவு – CDB பரிகணக பியச, CDB சிசுதிரி புலமைப்பரிசில் திட்டம்
  • டிஜிட்டல் முறையில் ஆதரவளிக்கப்படும் உதவி – CDBsmbFriday
  • ஊழியர் தன்னார்வ செயற்பாடு – CDB ஹிதவத்கம்

 

ஒட்டிசம் தொடர்பில் ஆரம்பத்திலேயே செயலாற்றுவது

CDB மற்றும் சிறுவர் விருத்திக்கான இலங்கை சம்மேளனம் (SLACD) ஆகியன இணைந்து ஒட்டிசம் நம்பிக்கை நிதியத்தை உருவாக்கியிருந்ததுடன், அதனூடாக இலங்கையில் ஒட்டிசம் தொடர்பான விழிப்புணர்வு பணிகளை வலுப்படுத்தியிருந்தன. CDB தான் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு ஒரு மில்லியன் வியாபாரங்களிலிருந்தும் ரூ. 100 ஐ இந்த நிதியத்துக்காக பங்களிப்பு செய்கின்றது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு நடவடிக்கைகளினூடாக, ஒட்டிசம் குறைபாட்டைக் கொண்ட ஒவ்வொரு குழந்தையும், ஆரம்பத்தில் இனங்காணப்பட்டு, அவர்களின் வாழ்க்கையில் ஒட்டிசம் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தின் பாதிப்பை குறைப்பதற்கு ஆதரவு வழங்கப்படும். இலங்கையில் ஒட்டிசம் குறைபாடு அதிகரித்து காணப்படும் நிலையில் இந்தத் திட்டத்துடன் நாம் கைகோர்த்துள்ளோம். பொது மக்கள் மத்தியில் போதியளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவதனூடாக ஆரம்பத்திலேயே ஒட்டிசம் குறைபாட்டை இனங்கண்டு கொள்வதனூடாக இலகுவாக ஒட்டிசம் குறைபாட்டு நிலையை நிர்வகித்துக் கொள்ள முடியும். விழிப்புணர்வை ஏற்படுத்துவதனூடாக உரிய காலப்பகுதியில் அவசியமான ஆரம்ப இனங்காணல்களை மேற்கொள்ள உதவுவதுடன், குறைபாடு தொடர்பில் சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ளவும் உதவியாக அமைந்திருக்கும்.

sustainability programs

As a second phase of the project, we set up mobile clinics to disseminate information about autism by involving our customers and the general public. SLACD organised two outreach programs in Pimbura and Rathnapura which were funded through the Autism Trust Fund. In collaboration with the SLACD, a poster campaign was also launched whilst Ampara General Hospital was given a Development Sensory Unit through our collaborative efforts through the Autism Trust Fund. Furthermore, a state-of-the-art children’s intervention center at Anuradhapura Teaching Hospital named “Pragathi” was established in 2019.

 

CDB ஸ்மார்ட் கணனி ஆய்வுகூடம்

சப்ரகமுவ மாகாணத்தின், குருவிட்ட, தெவிபஹால எனும் சிறிய கிராமத்தில் ஸ்ரீ சரணஜோதி திஸ்ஸ வித்தியாலயத்தில் 11ஆவது நன்கொடையாக “ஸ்மார்ட் வகுப்பறை“ என்பதை CDB நன்கொடையாக வழங்கியிருந்தது. 2017/18 நிதியாண்டில் 1.5 மில்லியன் ரூபாய் முதலீட்டில் இந்த வகுப்பறை நிறுவப்பட்டது. கிராமிய இளைஞர்கள் மத்தியில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதில் எமது முயற்சிகளின் அங்கமாக இது அமைந்திருந்ததுடன், அதனூடாக எதிர்காலத்துக்கு பொருத்தமான தொழில்நுட்பங்களுக்கு தம்மை பழக்கப்படுத்திக் கொள்ள உதவியாக அமைந்திருப்பது எதிர்பார்ப்பாகும். கடந்த பத்தாண்டுகளில், நாட்டின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பத்து பின்தங்கிய பாடசாலைகளுக்கு பத்து தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை நாம் ஏற்கனவே நன்கொடையாக வழங்கியிருந்தோம். கல்வி அமைச்சு மற்றும் வலய கல்வித் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து செயலாற்றி இந்த வசதி தேவைப்படும் பாடசாலைகளை நாம் இனங்காண்கின்றோம். அதன் பின்னர் குறித்த பாடசாலைக்கு பக்கசார்பற்ற வகையிலான மதிப்பாய்வு விஜயமொன்றை மேற்கொள்வோம்.

school is given a brand new, fully equipped IT laboratory with brand new computers

தெரிவு செய்யப்படும் பாடசாலைக்கு புத்தம் புதிய, முழு வசதிகளையும் கொண்ட தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம் வழங்கப்படுவதுடன், அதில் உரிமம் பெற்ற மென்பொருட்களுடனான புதிய கணனிகள், கணனி மேசைகள், கதிரைகள், ஸ்கேனர்கள், பிரின்டர்கள் மற்றும் மல்டிமீடியா வசதிகள் போன்றன அடங்கியிருக்கும்.

 

CDB சிசுதிரி புலமைப்பரிசில் திட்டம்

தொடர்ச்சியான 11ஆவது வருடமாகவும், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆகியவற்றில் உயர் பெறுபேறுகளைப் பதிவு செய்த மாணவர்களுக்கு நாம் CDB சிசுதிரி மையத்தினூடாக வெகுமதிகளை வழங்கியிருந்தோம். குறைந்த வருமானமீட்டும் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு இந்த புலமைப்பரிசில்கள் பிரதானமாக பகிர்ந்தளிக்கப்படுகின்றன. வெளிப்படையான மற்றும் பக்கசார்பற்ற தெரிவு முறைக்கமைய இந்த வெகுமதிக்கான மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் உயர் பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் வரையில் ரூ. 10000 வருடாந்த பணப் பரிசுக் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் வரையில் வருடாந்தம் ரூ. 15000 ஐ பெறுகின்றனர்.

CDB Sisudiri Scholarship Programme

 

CDBsmbFriday

எமது சிறு மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மை வாடிக்கையாளர்களுக்கு தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. எமது கூட்டாண்மை இணையத்தளத்தினூடாக சமூக வலைத்தளங்களில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த வாடிக்கையாளர் பிரிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாய்ப்பை நாம் ஏற்படுத்தியிருந்தோம். இதனூடாக இணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள உதவியிருந்ததுடன், தமது வியாபாரங்களை ஊக்குவித்துக் கொள்ளவும், ஏனையவர்களை இணையத்தளத்தில் இணைந்து கொள்ள பிரேரிக்க ஏதுவாகவும் அமைந்திருந்தது.

CDB SMB FRiday

CDB SMB Friday பக்கத்தை பார்வையிட இங்கே அழுத்தவும்

 

CDB ஹிதவத்கம

நாம் இயங்கும் சமூகத்தினர் மத்தியில் நம்பிக்கையை பேணுவதுடன், அவர்களுக்கு வலுவூட்டுவது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்துகின்றோம். எனவே, அவர்களின் விருத்திக்காக நாம் தொடர்ச்சியாக பங்களிப்பு வழங்குவதுடன், ஆரோக்கியமான, மீண்டெழுந்திறன் படைத்த மற்றும் நிலைபேறான சமூகங்களை கட்டியெழுப்ப பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும்.

பல்வேறு சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளில் பங்கேற்பதற்காக எமது ஊழியர்கள் சுயமாக முன்வந்துள்ளனர். நாம் இயங்கும் சகல பாரிய புவியியல் பகுதிகளிலும் நிலைபேறான பிரதிநிதிகளை நியமித்துள்ளமையினூடாக, எமது நிலைபேறாண்மை திட்டங்களை முன்னெடுப்பதுடன், எமது நிறுவனத்தின் பிரதான பெறுமதிகளுடன் ஒன்றிணைத்துள்ளோம்.

 

சூழல் நிலைபேறாண்மை

”மிஹிகத்தட ஆதரென்” என்பது எமது பிரதான சூழல்சார் நிலைபேறாண்மை திட்டமாக அமைந்துள்ளதுடன், சூழல் மீது எமது மக்களின் பொறுப்பு மற்றும் ஈடுபாட்டை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. எமது இயற்கை வளங்களை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பதற்கான உறுதியான செயற்பாடுகளை மேற்கொள்ள இந்தத் திட்டம ஏதுவாக அமைந்திருப்பதுடன், நிறுவனம் எனும் வகையில், சூழலுக்கு நட்பான வியாபார செயற்பாடுகளினூடாக புவியின் எதிர்கால சுகாதாரம் மற்றும் நலன் தொடர்பில் அக்கறையுடன் செயலாற்ற தூண்டுவதாக அமைந்துள்ளது.

Sustainability at CDB

  • வலு மற்றும் காபன்
  • உயிரியல் பரம்பல்
  • கழிவு முகாமைத்துவம்
  • ஊழியர் ஈடுபாடு

 

வலு மற்றும் காபன்

ISO 14064-1:2006 காபன் சான்றளிக்கப்பட்ட நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனம்

2015 ஆம் ஆண்டில் தெற்காசியாவில் ISO காபன் சான்றைப் பெற்றுக் கொண்ட முதலாவது நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்ந்ததுடன், இந்த சான்றினூடாக எமது காபன் வெளியீட்டை குறைப்பதற்கான எமது கடப்பாட்டை மேலும் உறுதி செய்துள்ளது. காபன் வெளியீடுகளை படிப்படியாகக் குறைப்பது எனும் செயன்முறையில் இந்த அர்ப்பணிப்பை உள்வாங்கி, சூழல் மாசடைதல் குறைப்பு மற்றும் சூழல் பாதுகாப்பு செயன்முறைகள் முன்னெடுப்பது போன்ற செயற்பாடுகளை எமது நிறுவனத்தின் பரந்த காபன் வெளியீட்டு குறைப்பு குறிகாட்டிகளுக்கமைய முன்னெடுக்கின்றோம்.

 

காபன் நடுநிலை வியாபார ஸ்தாபனம்

Climate Smart Initiatives (Pvt) Ltd இனால் காபன் நடுநிலை வியாபார ஸ்தாபனம் எனும் சான்று CDB க்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடனான எமது பங்காண்மையினூடாக, அறிவு பகிர்வு மற்றும் வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகத்துக்கு பிரத்தியேகமான சூழல் உணர்திறன் மிக்க உள்ளம்சங்களை பெற்றுக் கொடுக்க ஏதுவாக அமைந்திருந்தது. சமூகத்தில் நாம் ஆற்றும் பல்வேறு பணிகளினூடாக பங்காளர்கள் மத்தியில் நேர்த்தியான ஆதிக்கத்தை எம்மால் ஏற்படுத்த முடிந்திருந்ததுடன், உதாரணமாக பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனம், தங்கியிருக்கக்கூடிய நிதிச் சேவைகள் வழங்குநர் மற்றும் நம்பிக்கை வென்ற தொழில் வழங்குநர் எனும் வகையில் எம்மால் சேவைகளை வழங்க முடிந்துள்ளது.

 

UNFCCC காலநிலை நடுநிலை உறுதிமொழி

நாம் UNFCCC காலநிலை நடுநிலை உறுதி மொழியில் கைச்சாத்திட்டுள்ளோம். இதனூடாக, காபன் நடுநிலை செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அர்ப்பணிப்பை உறுதி செய்துள்ளோம். காலநிலை மாற்றத்துக்கு எதிரான செயற்பாடுகளின் தேவை முன்னரை விட தற்போது அதிகரித்துள்ளதுடன், தினசரி காலநிலை மாற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், எமது வியாபார செயற்பாடுகளுடன் அவற்றை தொடர்புபடுத்தி இடர் நிலையை குறைப்பதுடன், நீண்ட கால வியாபார பெறுப்புக்கூரலையும் உறுதி செய்துள்ளோம்.

 

கழிவு முகாமைத்துவம்

e-கழிவு

மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட ஆண்டில் Green Link உடன் இணைந்து எமது e-கழிவு மீள்சுழற்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தினூடாக எம்மால் இலத்திரனியல் கழிவுகளை பாதுகாப்பாான முறையில் அகற்ற முடிவதுடன், சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை குறைத்துக் கொள்ள முடிந்துள்ளது. e-கழிவு சேகரிப்பு வாரம் எனும் புதிய சூழல் பாதுகாப்பு திட்டமொன்றை நாம் ஆரம்பித்திருந்தோம். நிறுவனத்தின் பணிப்பாளர்கள், கூட்டாண்மை முகாமைத்துவ அங்கத்தவர்கள் மற்றும் சிரேஷ்ட முகாமையாளர்களின் பங்களிப்புடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடதாசி கழிவு

தொடர்ச்சியான ஏழாவது ஆண்டாகவும், கடதாசி கழிவு மீள்சுழற்சித் திட்டம் எமது தலைமையகத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மரங்களை பேணுவது மற்றும் கடதாசி உற்பத்தி செயன்முறையில் விரயமாகும் வலுவை குறைப்பது போன்றவற்றில் பங்களிப்பு வழங்குவதற்காக Green Links உடன் கைகோர்த்திருந்தோம். இந்தத் திட்டத்தினூடாக சூழலுக்கு மிகவும் குறைந்த தாக்கத்துடன், கழிவு கடதாசிகளை பயன்படுத்துவதற்கான வழிமுறையை எமக்கு வழிகோலப்பட்டிருந்தது.

Sustainability at office

ஊழியர்கள் மத்தியில் கடதாசி மற்றும் வலு பாதுகாப்பாக நுகரப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், எளிமையான CDB அறிவித்தல்களை நிறுவியிருந்தது. இதில் கடதாசியின் இருபக்கங்களிலும் பிரதி எடுப்பது, கடிதத் தலைப்புகளை சரியான முறையில் அச்சிடுவது, கடதாசியின் இரு பக்கங்களும் பயன்படுத்தப்பட்டிருந்தால் shredder இயந்திரத்தை பயன்படுத்தி கழிவகற்றுவது போன்றன அடங்கியிருந்தன. ஒவ்வொரு அச்சுப்பிரதி எடுக்கும் இயந்திரங்கள் மற்றும் shredder ஆகியவற்றுக்கு அண்மையில் இந்த அறிவித்தல்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

கடதாசி மற்றும் e-கழிவு மீள்சுழற்சியினூடாக சேமிப்புகள் (2017/18 இல்)

Savings from paper and e-waste recycling (in 2017/18)