CDB கடனட்டைகள் அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

கே: எனது வட்டியில்லாத கடன் காலப்பகுதி யாது?

ப: முன்னைய மாத நிலுவைத் தொகை, நிலுவைத் திகதிக்கு முன்னதாக முழுமையாக செலுத்தப்பட்டிருந்தால், 55 நாள் வட்டியில்லாத கடன் காலப்பகுதிக்கான தகைமையை நீங்கள் கொண்டிருப்பீர்கள்.

கே: எமது கடனட்டை நிலுவையின் மீது எந்தளவு வட்டி/நிதிக் கட்டணத்தை நான் செலுத்த வேண்டும்

ப: சகல கொள்வனவுகள் மற்றும் முற்பண மீளப்பெறுகைகள் அடங்கலாக சகல கொடுக்கல் வாங்கல்கள் மீதான நிதிக் கட்டணம் மாதமொன்றுக்கு 2.33% ஆகும் (வருடாந்தம் 28%). நிலுவைத் திகதியன்று முழுமையான தொகை செலுத்தப்படாவிடின் அல்லது நிலுவைத்திகதியன்று அல்லது அதன் பின்னர் பகுதியளவு/ஆகக் குறைந்த தொகை செலுத்தப்பட்டிருந்தால் அல்லது நிலுவைத் திகதிக்கு பின்னர் முழுமையான தொகை செலுத்தப்பட்டால் வட்டி அறவிடப்படும்.

கே: பண மீளப்பெறுகைகள் மீதான நிதிக் கட்டணம் யாது?

ப: மீளப் பெறப்பட்ட தொகையின் 5% அல்லது ரூ. 1000 இவற்றில் உயர்வானது.

கே: பண மீளப்பெறுகை எல்லைப் பெறுமதி யாது

ப: ஸ்டான்டர்ட், கோல்ட், டைட்டேனியம் அல்லது பிளாட்டினம் கடனட்டை வகைகளுக்கான பண மீளப்பெறுகை எல்லைப் பெறுமதி, அட்டையின் மொத்த எல்லைப் பெறுமதியின் 20% ஆகும். வேர்ள்ட் வகை அட்டைகளுக்கு அட்டையின் மொத்த எல்லைப் பெறுமதியின் 10% ஆகும்

கே: எனது ஆகக்குறைந்த கொடுப்பனவு தொகை யாது?

ப: மொத்த நிலுவைத் தொகையின் 5%

கே: கொடுப்பனவு காலம் தாழ்த்தப்பட்டால் அதற்கான கட்டணம் யாது?

ப: ரூ. 1750.00 காலம் தாழ்த்திய கொடுப்பனவு பொருந்தும்.

கே: கடனட்டையுடன் தொடர்புடைய கொடுப்பனவு நிலுவைத் திகதி மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டணப் பட்டியல் தயாரிப்பு காலம் மாற்றப்படலாமா?

ப: ஆம், முடியும். நீங்கள் செய்ய வேண்டியது, எமது 24 மணி நேரடி வாடிக்கையாளர் சேவை ஹொட்லைன் இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தி கோரிக்கையை முன்வைப்பதாகும்.

கே: வழங்கப்பட்டுள்ள கடன் எல்லைப் பெறுமதியை விட அதிகமாக எனது கடனட்டையை பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

ப: ரூ. 1200.00 எல்லை மீறிய கட்டணம் அறவிடப்படும்

கே: எனது கடனட்டை கூற்றை எவ்வாறு நான் பெறுவேன், எந்தளவு காலப்பகுதிக்கு ஒரு முறை அனுப்பப்படும்

ப:ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு கட்டணப் பட்டியல் தயாரிப்பு தினங்கள் உள்ளன. 15ஆம் திகதி மற்றும் மாதத்தின் இறுதி நாள். உங்கள் மின்னஞ்சலுக்கு e-கூற்றைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தபால் மூலம் நேரடி கூற்றுகளைப் பெறலாம்.

கே: உரிய காலப்பகுதியினுள் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவம் என்ன?

ப: உங்களின் கடன் எல்லைப் பெறுமதியை நாம் அடிக்கடி மீளாய்வு செய்து, தேவையான போது உங்களின் எல்லைப் பெறுமதியை மேம்படுத்துவோம். அடிக்கடி பாவனை மற்றும் உரிய நேரத்தில் கட்டணம் செலுத்துவது போன்றன சுயமாக எல்லை அதிகரிப்புகளுக்கு தகைமை பெறும். அடிக்கடி பயன்படுத்தாமை அல்லது கடன் எல்லைப் பெறுமதியை குறைந்தளவு பயன்படுத்துகின்றமை மற்றும் காலம் தாழ்த்திய கொடுப்பனவுகள் போன்றவற்றினூடாக உங்களின் கடன் எல்லைப் பெறுமதி சுயமாக குறைக்கப்படலாம். உங்களின் கூற்றுகளில் விசேடமான அறிவிப்புகளினூடாக உங்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

நிலுவைத் திகதியன்று ஆகக்குறைந்த தொகை செலுத்தப்படாவிடின், கணக்கு நெறிபிறழ்ந்ததாக (Delinquent) வகைப்படுத்தப்படும். காலம் தாழ்த்திய கொடுப்பனவுகள் அல்லது உங்களின் எல்லைப் பெறுமதியை மீறிய பயன்படுத்தல்கள் போன்றன உங்களின் கொடுக்கல் வாங்கல்கள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும். உங்கள் கடன் தரப்படுத்தலிலும் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், எதிர்காலத்தில் நீங்கள் மேற்கொள்ளும் எல்லை அதிகரிப்பு கோரிக்கைகளை நிராகரிக்கச் செய்யலாம். ஒழுங்கு விதிமுறைகளின் பிரகாரம், உங்களின் கடனட்டை தகவல்கள் அடிக்கடி CRIB க்கு அறிவிக்கப்படும். இந்தத் தகவல்களை சகல வங்கிகள் மற்றும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் பகிர்ந்து கொள்கின்றன.

கே: எனது CDB MasterCard கடனட்டை களவாடப்பட்டால்/காணாமல் போனால் அல்லது சேதமடைந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?

ப: உங்கள் கடனட்டை காணாமல் போனால்,

  • CDB கடனட்டை ஹொட்லைனுக்கு இழப்பு/சேதம் பற்றி அறிவிக்கவும்
    credit Card hotline
  • CDB கடனட்டை ஹொட்லைன்/CDB நிலையத்தினூடாக மாற்றீட்டை வழங்குமாறு கோரவும் CDB credit card hotline/CDB outlet
  • நீங்கள் அட்டை தொலைந்துவிட்டதாக அறிவித்த பின்னர் உங்களின் CDB MasterCard கடனட்டையை நீங்கள் கண்டுபிடித்தால், அதனை பயன்படுத்த முயற்சிக்க வேண்டாம்
    CDB MasterCard ஐ நான்காக வெட்டி அழித்துவிட்டு, அது பற்றி CDB க்கு அறிவிக்கவும்/li>
  • பயன்படுத்த முயற்சிக்க வேண்டாம்
    CDB MasterCard ஐ நான்காக வெட்டி அழித்துவிட்டு, அது பற்றி CDB க்கு அறிவிக்கவும்
  • 10 வேலை நாட்களுக்குள் மாற்றீட்டு அட்டை கூரியரில் அனுப்பி வைக்கப்படும்

கே: எனது CDB MasterCard கடனட்டையை எவ்வாறு நான் இரத்துச் செய்வது?

ப: உங்களின் கடனட்டையை இரத்துச் செய்ய வேண்டுமாயின், பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்:

  • கிளை/தபால் மூலமாக கார்ட் சென்ரர் முகாமையாளருக்கு தலைப்பிட்டு அட்டையை இரத்துச் செய்யும் காரணத்தை குறிப்பிட்டு கோரிக்கை கடிதமொன்றை சமர்ப்பிக்கவும்.
  • மொத்த நிலுவைத் தொகை செலுத்தித் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும், எவ்விதமான நிலுவைகளும் இல்லாவிடின், 3 வேலை நாட்களுக்குள் அட்டை இரத்துச் செய்யப்படும்.

கே: எவ்வாறு முறைப்பாட்டை மேற்கொள்ள முடியும்?

ப: எமது 24/7 CDB கடனட்டை ஹொட்லைன் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும், 3 வேலை நாட்களுக்குள் நாம் பதிலளிப்போம்.