கிரடிட் கார்ட் நடவடிக்கைகளுக்கான அறிவூறுத்தல் கோவை சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பைனான்ஸ் பிஎல்சி

2019 ஜனவரி செயலாக்கம்

உள்ளடக்கம்

1. முன்னுரை
2. முக்கிய கடமைகள்
3. தகவல்
4. கட்டண விபரங்கள் (கட்டணம் ஃ அறவீடுகள் ஃ வட்டி)
5. விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நெறிகள்
6. கிரெடிட் கார்ட் ஃ PஐN இலக்கத்தை வெளியிடுதல்
7. கணக்கு செயற்பாடு
8. கணக்கு விபரங்கள் தொடர்பான நம்பகத்தன்மை
9. கடன் தொகைகளின் சேகரிப்பு
10. முறையீடுகளை கையாளல்
11. கிரெடிட் கார்ட் ஒன்றை முடிவூறுத்தல்
12. பின்னூட்டம் மற்றும் பரிந்துரைகள்

 

1. முன்னுரை

1.1 இது இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டஇ கிரடிட் கார்ட்களை வெளியிடும் அங்கத்துவ வங்கிகள் ஃ நிறுவகங்கள் (இதன் பின்பு “வெளியீட்டாளர்” என்று அறியப்படும்) மற்றும் ஃ அல்லது அதன் துணை அமைப்புகள் பின்பற்ற வேண்டிய கிரடிட் கார்ட் நடவடிக்கைகள் அறிவூறுத்தல் விதிமுறைகள் இல. 01ஃ2010 இனது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைவான ஒரு கட்டாயமான தொடர்புக் கோவையாகும் (இதன் பின்பு “கோவை” என அறியப்படும்). தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான சேவைக்கான தராதரத்தை அளவிடும் ஒரு குறிகாட்டியாக இக்கோவை அமையூம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிரடிட் கார்ட் மற்றும் ஏனைய கார்ட் உற்பத்திகளை வழங்கும்போது வழங்குனருக்கான கடமைப் பொறுப்புகள் பற்றி இக்கோவை விளக்கமளிக்கிறது. வெளியீட்டாளரின் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளும்போது இக்கோவை வழிகாட்டியாக அமையூம். வாடிக்கையாளர்கள் தமது உரிமைகள் மற்றும் விருப்பங்களை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய அளவீடுகளை புரிந்துகொள்வதற்கு இக்கோவை உதவியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை கைக்கொள்ளும் வெளியீட்டாளர்கள் தமது இணையத்தளத்தில் காட்சிப்படுத்துவதோடுஇ வாடிக்கையாளர் வேண்டுகோளுக்கு இணங்க பிரதிகளையூம் வழங்குவர்.

 

இந்த அறிவூறுத்தல் கோவையைப் பற்றி

1.2 ஒரு கட்டாய ஆவணம் என்ற வகையில்இ இவ் அறிவூறுத்தல் கோவை வாடிக்கையாளர்களின் நலனை முன்னிட்ட அதியூயர் செயற்பாட்டு தராதரங்களை அடைவதற்காகஇ போட்டியை ஊக்குவிப்பதோடு சந்தைப்படுத்தல் காரணிகளுக்கும் உத்வேகமளிக்கிறது. இக் கோவையில்இ “நாம் ஃ எங்களது” எனப்படுவது வழங்குனர் ஆகும். இக் கோவையின் தராதரங்கள் பிரிவூ 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளின் ஆளுகைக்கு உட்பட்டது. வேறு விதமாக குறிப்பிட்டாலன்றிஇ இக் கோவையின் அனைத்து பாகங்களும்இ நாம் கவூன்டரின் ஊடாகஇ தொலைபேசி ஊடாகஇ இணையத்தின் ஊடாக மற்றும் ஃ அல்லது வேறு வழிமுறைகளினால் பெற்றுத்தரும் அனைத்து கிரடிட் கார்ட் உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்கும் செல்லுபடியாகும். இக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகள் வழமையான வணிக சூழலில் மாத்திரமே செல்லுபடியாகும். தடுக்க முடியாத வலுக்கட்டாய நிலைமையின்போது இக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவது சாத்தியமல்ல என்பது புரிந்து கொள்ளக்கூடியதாகும்.

 

2. முக்கிய கடமைகள்

இவை எமது கடமைகள் ஆகும்:

2.1 எமது அனைத்து நடவடிக்கைகளிலும் நியாயமாகவூம் முறையாகவூம் கீழுள்ள விடயங்களை பின்பற்றி செயற்படுவோம்.

 a. நாம் வழங்கும் உற்பத்திகள் மற்றும் சேவைகளில்இ மற்றும் எமது ஊழியர்கள் ஃ முகவர்கள் பின்பற்றும் செயன்முறைகள் மற்றும் செயற்பாடுகளில் இந்த அறிவூறுத்தல் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தராதரங்களை பின்பற்றுதல்.

 b. எமது உற்பத்திகள் மற்றும் சேவைகள் ஆனவைஇ தொடர்புடைய சட்டங்கள்இ விதிமுறைகள்இ அறிவூறுத்தல்கள்இ வழிகாட்டல்கள் மற்றும் சுற்றறிக்கைகளுக்கு அமைவாக இருப்பதை உறுதி செய்தல.;

 c. வாடிக்கையாளர்கள் உடனான எமது நடவடிக்கைகள்இ நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்டவையாக அமைந்திருப்பதை உறுதி செய்தல்

 d. சட்டரீதியான மற்றும் நெறிமுறையான வாடிக்கையாளர் நடவடிக்கைகளில் ஈடுபடுதல்

 

2.2 கீழுள்ள தகவல்களை இலகுவான மொழியில் வழங்கி எமது கிரடிட் கார்ட் உற்பத்திகள் மற்றும் சேவைகள் எவ்வாறு தொழிற்படுகின்றன என்பதை வாடிக்கையாளர் அறிந்து கொள்வதற்கு உதவூதல்

 a. வாடிக்கையாளருக்கு கிடைக்கும் பலன்கள்

 b. இந்; நலன்களை வாடிக்கையாளர் எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்

 c. செலவூகள்இ கட்டணங்கள் மற்றும் அறவீடுகள்

 d. தனது விசாரணைகளை யாரிடம் ஃ எவ்வாறு தொடர்பு கொண்டு வாடிக்கையாளர் அறியலாம்

 

2.3 வாடிக்கையாளரின் விசாரணைகள் மற்றும் முறையீடுகளை துரிதமாகவூம் செயற்திறனுடனும் கையாளுவதற்கு

 a. அவர்களது விசாரணைகளுக்கான வழிமுறைகளை வழங்குங்கள்

 b. பொறுமையாக அவர்களை செவிமடுங்கள்

 c. முறையீடு அல்லது விசாரணை கிடைக்கப்பெற்று பத்து வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு பதில்களை பெற்றுக்கொடுங்கள்

 d. எமது பதில் அவர்களுக்கு திருப்தி அளிக்காவிட்டால் அவர்களது முறையீட்டை எவ்வாறு முன்கொண்டு செல்லலாம் என வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துங்கள்

 

2.4 இக் கோவைi எமது இணையத்தளத்தில் அனைவரும் பார்வையிடும் விதமாக பதிவேற்றுதல்இ மற்றும் வாடிக்கையாளர் வினவூம்போது ஆங்கிலம்இ சிங்களம் மற்றும் தமிழில் பிரதிகள் கிடைக்கச் செய்வதன் ஊடாக அறிவூறுத்தல்களை பகிரங்கப்படுத்துங்கள்

 

3. தகவல் (தமது தேவைகளுக்கு ஏற்ற உற்பத்திகள் மற்றும் சேவைகளை தெரிவூ செய்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு உதவூதல்)

3.1 கிரடிட் கார்டு ஒன்றை வழங்குவதற்கு முன்பு நாம்இ

a. பின்வரும் விடயங்கள் உள்ளடங்கலாக எமது கிரடிட் கார்ட் உற்பத்திகளின் சிறப்பம்சங்களை விளக்கும் தகவலை வழங்குவோம்

 – தொடர்புடைய விதிகள் மற்றும் நிபந்தனைகள்

 – அறவிடப்படும் கட்டணம் மற்றும் வட்டி வீதங்கள்

 – குறைந்தபட்ச கடன் தொகை பெறுமதி மற்றும் வட்டி என்பன கணிக்கப்படும் முறை

 – வட்டி மற்றும் அபராத கட்டணங்களை எவ்வாறு குறைத்தல் அல்லது தவிர்ப்பது

 – கட்டணப்பட்டியல் மற்றும் கொடுப்பனவூ செயன்முறைகள்

 – புதுப்பித்தல் மற்றும் முடிவூறுத்தல் செயன்முறைஇ மற்றும்

 – கார்டை செயற்படுத்துவதற்கு அவசியமான வேறு ஏதேனும் முக்கிய தகவல்கள்

b. நாம் கிரடிட் கார்ட் ஒன்றை வழங்குவதற்கு தேவையான வாடிக்கையாளரின் அடையாளம்இ முகவரி மற்றும் தொழில் என்பவற்றை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் உட்பட வழங்க வேண்டிய குறைந்தபட்ச தகவல்கள் மற்றும் ஆவணங்கள்இ அத்துடன் சட்டரீதியான மற்றும் ஒழுங்குபடுத்தல்கள் தேவைக்காக சட்ட அதிகார சபைகளினால் நிபந்தனையாக்கப்பட்ட வேறு ஏதேனும் ஆவணங்கள் தொடர்பாக வாடிக்கையாளருக்கு தெரியப்படுத்துங்கள்.

c. கிரடிட் கார்ட்; விண்ணப்ப படிவத்தில் வாடிக்கையாளர் வழங்கியூள்ள தகவல்களை அவசியமானால் அவருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மற்றும் ஃ அல்லது அதற்கென நாம் அமர்த்தியூள்ள முகவர்களின் ஊடாக உறுதிப்படுத்துங்கள்

 

3.2 வாடிக்கையாளர்கள் உற்பத்தி ஃ சேவை ஒன்றுக்கு விண்ணப்பிக்கும்போது நாம் உத்தேசித்துள்ள மீள்திரும்புகை தடவைகளை அறியத் தருவோம்.

3.3 கிரடிட் கார்டின் பாவனை தொடர்பான விதிகள் மற்றும் நிபந்தனைகள்இ அறவிடப்படும் வட்டி மற்றும் கட்டணங்கள்இ கிரடிட் கார்ட் தொலைந்தால் அல்லது முறையற்ற பாவனையின்போது வாடிக்கையாளர் கொண்டுள்ள உரிமைகள் மற்றும் பொறுப்புகள் மற்றும் ஏனைய தொடர்புடைய விபரங்கள் பற்றி விளக்குமளிக்கும் சேவை கையேடு அல்லது அங்கத்துவ புத்தகம் ஒன்றை முதலாவது கிரடிட் கார்ட் உடன் நாம் வழங்குவோம்.

3.4 வாடிக்கையாளர்கள் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எம்மைத் தொடர்பு கொள்வதற்காகஇ தொலைபேசி இலக்கங்கள்இ தபால் முகவரிஇ இணையதளம்இ இமெயில் முகவரி ஆகிய தொடர்பு விபரங்களை நாம் வழங்குவோம்.

3.5 வாடிக்கையாளர் தனது மாதாந்த கட்டணப்பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக அனைத்து கொடுப்பனவூ ரசீதுகளையூம் சேகரிக்குமாறு நாம் அறிவூறுத்துகிறௌம். வாடிக்கையாளர் கிரடிட் கார்ட் கூற்றிலுள்ள ஏதேனும் கொடுக்கல் வாங்கல் ஒன்றை இனங்காண முடியாத சந்தர்ப்பத்தில்இ வேண்டுகோளின் அடிப்படையில் மேலதிக விபரங்கள் வழங்கப்படும். சில சந்தர்ப்பங்களில் குறித்த கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ளவில்லை வாடிக்கையாளர் என்பதை நிரூபிப்பதற்காக உறுதிப்படுத்தல் அல்லது சாட்சியத்தை நாம் கேட்கும் நிலை ஏற்படலாம்.

 

4. கட்டணத் திட்டம் (வட்டி ஃ கட்டணம் ஃ அறவீடுகள்)

4.1 நாம் எமது கட்டணம் மற்றும் அறவீடுகள் அட்டவணையை கீழுள்ள இடங்களில் வழங்குவோம் (வட்டி வீதங்கள் உட்பட)

 a. விண்ணப்பப் படிவத்துடன்

 b. சேவை கையேடு ஃ அங்கத்துவ நூலில்

 c. வாடிக்கையாளர் சேவை இலக்கங்களுடன் வாடிக்கையாளர் தொடர்பு கொள்ளும்போது

 d. எமது இணையதளத்தில்இ அல்லது

 e. எமது நியமிக்கப்பட்ட ஊழியர்களே ஊடாக

 

4.2 கிரடிட் கார்ட் கூற்று மற்றும் எமது இணையதளத்தில் கிடைக்கும் வெளியீட்டில் கிடைக்கும் தகவல்களுக்கு மேலதிகமாகஇ வேண்டுகோளின் அடிப்படையில்இ வாடிக்கையாளரின் கணக்கிற்கு நாம் எவ்வாறு வட்டி மற்றும் ஃ அல்லது கட்டணங்களை அறவிடுகின்றௌம் என்பதை உதாரணங்களைப் பயன்படுத்தி தௌpவாக விளக்கமளிப்போம்.

4.3 எமது கட்டணத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள்

எமது கிரடிட் கார்ட் உற்பத்திகளில் கட்டணத்திட்டத்தை மாற்றியமைக்கும்போது (வட்டி வீதம் மற்றும் ஃ அல்லது வேறு கட்டணம் ஃ அறவீடுகள்) வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தல் விடுப்பதற்காக இத்தகைய மாற்றங்கள் நடைமுறைக்கு வருவதற்கு 10 நாட்களுக்கு முன்பதாக தொலைபேசி தகவல்கள்இ இணையத்தளம்இ மற்றும் கிரெடிட் கார்ட் கூற்றின் ஊடாக நாம் தெரியப்படுத்துவோம்.

5. விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நெறிமுறைகள்

5.1 கள அதிகாரி

 a. எமது விற்பனை பிரதிநிதிகள்இ கார்ட் உற்பத்திகளை விற்பனை செய்வதற்காக வாடிக்கையாளர்கள் மற்றும் சாத்தியமுள்ள வாடிக்கையாளர்களை அணுகும்போது தம்மை அடையாளப்படுத்திக் கொள்வர்.

 b. எமது பிரதிநிதி ஏதேனுமொரு முறையற்ற நடத்தையை வெளிப்படுத்தியதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து முறையீடு கிடைக்கும் சந்தர்ப்பத்தில்இ நாம் அந்த முறையீடு தொடர்பாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

 

5.2 டெலிமார்க்கெட்டிங்

 a. எமது ஏதேனும் கிரடிட் கார்ட் உற்பத்திகளை விற்பனை செய்வதற்காக எமது டெலிமார்க்கெட்டிங் பணியாளர்கள் ஃ முகவர்கள் தொலைபேசியின் ஊடாக வாடிக்கையாளர்களை தொடர்புகொள்ளும்போது அல்லது ஏதேனும் குறுக்கு விற்பனை சலுகையின்போதுஇ அழைப்பை மேற்கொண்டவர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுஇ எமது சார்பாக அழைப்பை மேற்கொண்டதாக வாடிக்கையாளருக்கு அறிவூறுத்துவார்.

 b. வாடிக்கையாளருக்கு அசௌகரியமாக இருக்காத நேரத்தில் மாத்திரமே தொடர்பினை மேற்கொள்ள வேண்டுமென்பது கட்டாயமாகும். பொதுவாக இந்நேரம் 0900 மணி முதல் 1900 மணி வரை ஆகும்.

 c. வாடிக்கையாளர் எழுத்து மூலமாக அல்லது குரல் மூலமாக சொல்லியிருந்தால் மட்டுமே குறித்த நேரத்திற்கு முன்னர் அல்லது பின்னர் அழைப்பு மேற்கொள்ளப்படலாம்.

 

5.3 டெலிமார்க்கெட்டிங் ஒழுங்குமுறை

எமது டெலிமார்க்கெட்டிங் ஊழியர்கள் பின்வரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒழுங்குமுறைகளை பின்பற்றுவர்

 

5.3.1 அழைப்புக்கு முன்னர்

வங்கியினால் அல்லது வங்கியால் நியமிக்கப்பட்ட நேரடி விற்பனை முகவரினால் முடிவாக்கப்பட்ட பட்டியல்களில் இருந்து மாத்திரம் அழைப்பினை மேற்கொள்ளல்.

 

5.3.2 அழைப்பில் இருக்கும்போது

 a) அவர்களையூம்இ எமது வங்கியினையூம் அறிமுகம் செய்தபின்இ அழைப்பினை மேற்கொண்டமைக்கான காரணத்தை தெரிவித்தல்.

 b) மேற்கொண்டு தொடர்வதற்கான வேண்டுகோளை முன்வைத்துஇ அனுமதி நிராகரிக்கப்பட்டால்இ மன்னிக்குமாறு கேட்டு பணிவூடன் அழைப்பை துண்டியூங்கள்.

 c) கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொள்ளப்படும்போதுஇ நிலையான தொலைபேசிக்கு மீண்டும் அழைக்கவா என எப்பொழுதும் வினவூங்கள்.

 d) வாடிக்கையாளருக்கு மிகவூம் சௌகரியமான மொழியிலேயே முடிந்தளவூ உரையாடுங்கள்

 e) உங்கள் உரையாடலை வணிக விடயங்கள் சார்ந்ததாக பேணுங்கள். எப்பொழுதும் இடைமறிக்க அல்லது வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

 f) வாடிக்கையாளர் உற்பத்தியை வாங்கும் எண்ணத்துடன் இருந்தால் “முக்கியத்துவம் வாய்ந்த விதிகள் மற்றும் நிபந்தனைகள்” பற்றிய வாடிக்கையாளரின் அது புரிதலை சரிபாருங்கள்.

 g) வாடிக்கையாளர் கேட்கும்போது அவர்களது தொலைபேசி இலக்கம்இ அவர்களது மேற்பார்வையாளரின் பெயர் அல்லது எமது வங்கியின் தொடர்பு விபரங்களை வழங்குங்கள்.

 ர்) வாடிக்கையாளரின் நேரத்திற்காக அவருக்கு நன்றி தெரிவியூங்கள்.

 

5.3.3 அழைப்பொன்றின் பின்னர்

 a) வாடிக்கையாளர் எமது வழங்குகை தொடர்பாக ஆர்வமின்மையை வெளிப்படுத்தினால்இ அடுத்த மூன்று மாதங்களுக்கு அதே சலுகையூடன் அவரை அழைக்காமல் இருப்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.

 b) விற்பனை முடிவடைந்த உற்பத்திகள் தொடர்பாக வாடிக்கையாளர் அழைப்பினை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில்இ அத்தகையை விசாரணைகளை கையாள்வதற்காக வங்கியின் உரிய பிரிவூ அல்லது அலகுக்கு விற்பனை ஊழியர் வாடிக்கையாளரை அறிவூறுத்துதல் வேண்டும்.

 

5.4 வாடிக்கையாளரின் தகவல் தொடர்பான இரகசியத்தன்மை

விற்பனை பிரதிநிதிகள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் வாடிக்கையாளரின் இரகசியத் தன்மைக்கு மதிப்பளித்தல் வேண்டும். வாடிக்கையாளரின் விருப்பங்கள் பொதுவாக அவருடன் மாத்திரமே கலந்துரையாடப்பட வேண்டும். எனினும் வாடிக்கையாளரின் எழுத்து மூலமானஇ இமெயில் மூலமானஇ பதிவூ செய்யப்பட்ட தொலைபேசி அழைப்பினால்இ பெக்ஸ் அல்லது குறுஞ்செய்தி ஊடாக அனுமதியளிக்கப்பட்டால் எந்தவொரு தனிப்பட்ட நபர் ஃ குடும்ப அங்கத்தவர்இ அதாவது வாடிக்கையாளரின் கணக்காளர் ஃ செயலாளர் ஃ துணைவர் என்பவர்களோடு கலந்துரையாடப்படலாம்.

 

5.5 பயிற்சி

தமது நடவடிக்கைகளை செயற்திறன் மிகுந்த விதத்தில் முன்னெடுப்பதற்கு அவசியமான பயிற்சி மற்றும் வழிகாட்டல்கள் விற்பனைப் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும்

 

6. கிரடிட் கார்ட் ஃ PIN என்பவற்றை வழங்குதல்

6.1 நாம் பொதுவாக வாடிக்கையாளரின் கிரடிட் கார்டை அவரால் குறிப்பிடப்பட்ட தபால் முகவரிக்கு கூரியர் அல்லது பதிவூத் தபாலில் அனுப்பி வைப்போம். பதிலாகஇ வாடிக்கையாளரின் குறிப்பிட்ட அறிவூறுத்தல்களுக்கு அமைவாக வேறொரு முகவரிக்கு விநியோகிப்பதற்கும் எம்மால் முடியூம்.

6.2 வாடிக்கையாளருக்கு கிடைக்கும் கிரடிட் கார்ட் செயற்படுத்தப்படாமல் இருப்பின்இ வங்கியினால் குறிப்பிட்டுள்ள முறைகளைப் பின்பற்றி வாடிக்கையாளரால் கார்டை செயற்படுத்த முடியூம்.

6.3 PIN (தனிப்பட்ட அடையாள இலக்கம்) ஒழுங்கமைக்கப்பட்ட பின்பு வாடிக்கையாளருக்கு தனியாக அனுப்பி வைக்கப்படும்.

 

7.கணக்கு நடவடிக்கைகள் மற்றும் கிரடிட் கார்ட் கூற்றுகள்

7.1 வாடிக்கையாளர் தனது கிரடிட் கார்ட் கணக்கினை நிர்வகிப்பதற்கும் மற்றும் கிரடிட் கார்டை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கொள்வனவூகள் ஃ பணம் பெறுகைகளின் விபரங்களை சரிபார்க்க உதவூவதற்காகவூம் கிரடிட் கார்ட் கொடுக்கல் வாங்கல் விபரங்களை வாடிக்கையாளர் தபால் அல்லது இணைய வங்கிச் சேவை ஊடாக பெற்றுக்கொள்ளும் வசதியை நாம் வழங்குகின்றௌம். கிரடிட் கார்ட் கூற்றானது மாதத்தின் முன்பதாக முடிவூ செய்யப்பட்ட திகதியொன்றில் உருவாக்கப்படுவதோடு அது வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்படும்.

7.2 கிரடிட் கார்ட் கூற்று கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் அதன் பிரதி ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக எமக்கு தகவல் தெரிவிக்குமாறு நாம் வாடிக்கையாளரை அறிவூறுத்துகிறௌம். வாடிக்கையாளர் கொடுப்பனவூகளை சரியான காலக்கிரமத்தில் செலுத்துவதற்கு வசதியாக 10 காலண்டர் தினங்களுக்குள் பிரதி அனுப்பி வைக்கப்படும்

7.3 நாம் காலத்துக்கு காலம் அறிமுகப்படுத்தும் புதிய சேவைகள் மற்றும் பெறுமதி சேர்ப்புகள் தொடர்பாக வாடிக்கையாளருக்கு அறியத்தருவோம். அவற்றை ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் தெரிவூ வாடிக்கையாளருக்கு வழங்கப்படுவதோடுஇ அவ்வாறான புதிய சேவைகள் பற்றிய கட்டணங்கள் மற்றும் அறவீடுகள் முன்பதாக அறியத்தரப்படும்.

7.4 வாடிக்கையாளரின் கணக்குக்கு வைப்புச செய்யப்பட்ட காசோலை நிராகரிக்கப்படும் சந்தர்ப்பத்தில்இ அவ்வாறான காசாக்கப்படாத காசோலைகள் கிடைத்து 7 காலண்டர் தினங்களுக்குள் அது குறித்து வாடிக்கையாளருக்கு நாம் அறியத்தருவோம்.

7.5 கொடுப்பனவூ திகதிக்கு முன்பு எம்மால் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் வைப்பு செய்யப்பட்டு ஆனால்இ எமது தரப்பிலான தவறுகள் ஃ தாமதம் காரணமாக கொடுப்பனவூத் திகதிக்குப் பின்பு காசாக்கப்படும் காசோலைகள் தொடர்பான முறையற்ற அபராதங்;களை நாம் வாடிக்கையாளருக்கு விதிக்க மாட்டோம்.

7.6 வாடிக்கையாளரின் கணக்கில் ஏதேனும் தரமுயர்த்தல் மற்றும் ஃ அல்லது எல்லை மேம்படுத்தல் உத்தேசிக்கப்பட்டிருந்தால் அது பற்றி நாம் வாடிக்கையாளருக்கு அறியத் தருவோம். குறிப்பிடப்பட்ட காலம் வரையில் உத்தேசிக்கப்பட்ட தரமுயர்த்துதல் மற்றும் ஃ அல்லது எல்லை மேம்படுத்தலை ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் தெரிவூ வாடிக்கையாளருக்கு உண்டு. வாடிக்கையாளர்கள் அத்தகைய அறிவூறுத்தல்களை கவனமாக வாசித்து உரிய விதத்தில் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என நாம் எதிர்பார்க்கின்றௌம்.

7.7 வாடிக்கையாளரின் கிரடிட் கார்டை முறையற்ற பாவனையில் இருந்து தவிர்ப்பதற்காக என்ன செய்யலாம் என்பது பற்றி நாம் வாடிக்கையாளருக்கு அறியத் தருவோம்.

7.8 வாடிக்கையாளரின் கிரடிட் கார்ட் தொலைந்த அல்லது திருடப்பட்ட சந்தர்ப்பத்தில்இ அல்லது வாடிக்கையாளரின் ரகசிய இலக்கம் அல்லது வேறு பாதுகாப்பு விபரங்களை மூன்றாம் நபர் ஒருவர் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தில்இ வாடிக்கையாளரின் அறிவித்தலின் அடிப்படையில்இ வாடிக்கையாளரின் கார்டை இடைநிறுத்துவதற்கு உடனடி படிகளை நாம் மேற்கொள்வதோடுஇ கார்ட் உரிமையாளர் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைவாக இது குறித்து நடவடிக்கை மேற்கொள்வோம்

 

8. கணக்கு விபரங்கள் பற்றிய நம்பகத்தன்மை

8.1 வாடிக்கையாளரின் தனிப்பட்ட விபரங்களை நாம் ரகசியமாகவூம் நம்பகத் தன்மையூடனும் பேணுவோம் (குறித்த நபர் தொடர்ந்தும் எமது வாடிக்கையாளராக இல்லாத போதும்). கீழுள்ள நிலைமைகளைத் தவிர வாடிக்கையாளரின் கணக்குகளின் கொடுக்கல் வாங்கல் விபரங்களை நாம் மூன்றாம் நபர் ஒருவருக்கு தெரியப்படுத்த மாட்டோம்.

 a. சட்டத்திற்கு தேவைப்படும்போது

 b. வாடிக்கையாளரால் எழுத்து மூலமாகஇ இமெயில் மூலமாகஇ பதிவூ செய்யப்பட்ட தொலைபேசி அழைப்பின் ஊடாக அல்லது பெக்ஸ் ஃ குறுஞ்செய்தி ஊடாக வேண்டுகோள் விடுக்கப்படும்போது (இத்தகைய வேண்டுகோள்கள் எதிர்கால மேற்கோள் குறித்து சேமிக்கப்படும்)

 c. சட்டத்திற்கு அமைவாக நடந்து கொள்வதற்காக

 d. எமது தேவைகளின் அடிப்படையில்இ முறைகேட்டை தவிர்ப்பதற்காக அல்லது கணக்கு ஆய்விற்காக தகவல்களை வழங்க வேண்டிய சந்தர்ப்பத்தில்.

 

9. கடன் தொகைகளை சேகரித்தல்

எமது வங்கியின் கடன் தொகை சேகரிப்பு கொள்கையானதுஇ பணிவன்புஇ நியாயமான செயற்பாடுஇ மற்றும் உறுதியான நம்பகத்தன்மை என்பவற்றால் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. நாம் வாடிக்கையாளரின் நம்பிக்கை மற்றும் நீண்டகால உறவூ என்பவற்றை வளர்ப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். சில சந்தர்ப்பங்களில் கடன் தொகைகள் தொடர்பாக வாடிக்கையாளரை தொடர்பு கொண்டுஇ வாடிக்கையாளரது கிரடிட் கார்டின் தடங்கலற்ற செயற்பாடுகளை உறுதி செய்வதற்காகஇ குறித்த நேர இடைவெளியான 0900 மணி முதல் 1900 மணிக்கு முன்பு அல்லது அதன் பின்பு அழைப்புகள் மேற்கொள்ளப்படலாம்.

கடன் தொகை சேகரிப்பு மற்றும் அல்லது பாதுகாப்பு மீட்டுப் பெறுகை தொடர்பாக எமது ஊழியர்கள் அல்லது எம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கீகாரம் பெற்ற யாரேனும் ஒருவர் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதோடு வாடிக்கையாளருடன் முறையான விதத்தில் தொடர்பு கொள்வார்கள்.

கடன் தொகைகள் தொடர்பான அனைத்து தகவல்களையூம் நாம் வாடிக்கையாளருக்கு வழங்குவதோடுஇ கடன் தொகை கொடுப்பனவூகளுக்காக போதுமான அறிவித்தல்களையூம் மேற்கொள்வோம்.

வாடிக்கையாளரின் கடன் தொகை மற்றும் மீள் பெறுகை கடிதங்கள் தொடர்பாக வாடிக்கையாளர் வேண்டுகோள் முன்வைக்கும் ஏதேனும் விசாரணைகள் மற்றும் சந்தேகங்களுக்குஇ மீள் பெறுகை திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்று 10 வேலை நாட்களுக்குள் நாம் பதில் வழங்குவோம்.

 

10. சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல்களை உறுதிப்படுத்துதல்

சில சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளரின் கிரடிட் கார்டில் மேற்கொள்ளப்படும் சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல்களை உறுதிப்படுத்துவதற்காகஇ குறித்த நேர இடைவெளியான 0900 மணி முதல் 1900 மணிக்கு முன்பு அல்லது அதன் பின்பு அழைப்புகள் மேற்கொள்ளப்படலாம். அங்கீகாரமற்ற பாவனையை வாடிக்கையாளர் தவிர்க்கும் நோக்கில் இது முன்னெடுக்கப்படுகின்றது.

 

11. முறையீடுகளை கையாளல்

11.1 ர்வாடிக்கையாளர் முறையீடுகளை உள்ளக ரீதியில் கையாளல்

 • முறையீட்டை கையாளும் செயன்முறை ஒன்றை நாம் அமைப்பிற்குள் மேற்கொள்வோம்.

 • வாடிக்கையாளர் முறையீடுகளுக்கு பதிலளிக்கும் தடவைகள் மற்றும் முன்னேற்ற செய்முறை உட்பட எமது முறையீடுகளை கையாளும் அணுகுமுறையானது எமது இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்படும்.

 

11.2 இலங்கை நிதிச்சேவை குறைகேட்பு அதிகாரியிடம் முறையிடுதல்

வாடிக்கையாளருக்கு தனது முறையீடு தொடர்பாக திருப்தியளிக்கும் பதில் 30 நாட்களுக்குள் எம்மிடமிருந்து கிடைக்காமல்இ அவர் இது தொடர்பாக வேறு ஏதேனும் வழி முறைகளை பின்பற்ற விரும்பினால் வாடிக்கையாளர் இலங்கை நிதிச்சேவை குறைகேட்பு அதிகாரியை தொடர்புகொள்ளலாம். முகவரி: இல. 143யூஇ வஜிர வீதிஇ கொழும்பு 05. தொலைபேசி: +94 11 259 5624இ பெக்ஸ்: +94 11 259 5625இ இமெயில்: fosril@sltnet.lk இணையத்தளம்: www.financialombudsman.lk

 

12 கிரடிட் கார்ட் ஒன்றை முடிவூறுத்தல்

12.1 வாடிக்கையாளர் தனது எஞ்சிய கடன் தொகைகள் ஏதேனும் இருப்பின் அவை அனைத்தையூம் நிறைவூ செய்துஇ கிரடிட் கார்ட் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ள செயன்முறைகளை பின்பற்றிஇ எமக்கு அறிவித்தல் வழங்குவதன் மூலமாக கார்டை முடிவூறுக்க முடியூம்.

12.2 வாடிக்கையாளர் கிரடிட் கார்ட் உரிமையாளர் ஒப்பந்தத்தை மீறும் சந்தர்ப்பத்தில் கிரடிட் கார்டை நாம் இடைநிறுத்துவதோடுஇ செலுத்தப்படாத தொகைகளை மீளப் பெறுவதற்காக உரிய செயன்முறைகளின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியூம்.

 

13 பின்னூட்டம் மற்றும் பரிந்துரைகள்

வாடிக்கையாளர்கள் தமது பின்னூட்டம் மற்றும் பரிந்துரைகளை எமக்கு தெரிவிக்கலாம். எமது சேவைகளை மேம்படுத்துவதற்கு அவை உதவியாக இருக்கும்.