புகார்கள் மற்றும் மனக்குறைகள்

வாடிக்கையாளர் புகார்களைத் தீர்ப்பதற்கான நடைமுறை

எமது அனைத்து சி.டி.பி ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், எங்கள் சேவைகளைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் புகார்கள் / மனக்குறைகள் இருந்தால், உங்கள் கருத்துகளையும் பின்னூட்டல்களையும் நாங்கள் வரவேற்கிறோம். எங்கள் அழைப்பு மையத்தை 0117 388 388 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது customercare@cdb.lk எனும் மின்னஞ்சல் ஊடக அனுப்பலாம். மேலும் உங்கள் புகார்கள் / மனக்குறைகளைத் தீர்க்க நாம் எங்களால் முடிந்த அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்ள தயாராக உள்ளோம்.

எங்கள் தீர்மானம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டால், நீங்கள் உங்களுக்குரிய நிவாரணத்தை பெற்றுக்கொள்ளக் கூடியவாறு நிதி ஒம்புட்ஸ்மனுக்கு நேரடி புகார் அளிக்கலாம். ஒம்பூட்ஸ்மேன் திட்டத்தின் கீழ் வரும் வாடிக்கையாளர்களுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்படும் ஏதேனும் புகார்கள் மற்றும் தகராறுகளை விசாரித்து தீர்க்க அவருக்கு அதிகாரம் உள்ளது.

தற்போதைய நிதி ஒம்புட்ஸ்மேன்: ஆனந்த குமாரதாச
அலுவலகம்: 43A வஜிரா வீதி, கொழும்பு 5

தொலைபேசி: +94 11 259 5624
தொலைபேசி / தொலைநகல்: +94 11 259 5625
மின்னஞ்சல்: fosril@sltnet.lk

மேலதிக தகவல்கள் www.financialombudsman.lk என்ற இணையதளத்திலும் கிடைக்கின்றன