Corporate Information

நிறுவனம் தொடர்பான தகவல்கள்

அனைத்து வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கிடையிலும், நாமே முதன் முறையாக....

  • சமூக வலைத்தளங்கள் மூலம் நிதி பரிமாற்றம் செய்தது.
  • சுய பாதுகாப்பு (self-care) பயன்பாட்டுடன் (App) கடன் அட்டையினை அறிமுகப்படுத்தியது .
  • நிலையான வைப்புகளை ஆன்லைனில் திறக்க வாடிக்கையாளர்களுக்கு உதவியது
  • ஒரு வாழ்க்கை முறை மின் வணிக (lifestyle e-commerce) தளத்தை தொடங்கியது.
  • Core Bank Platform இணை கொண்டிருந்தது.
  • ISO 14064-1 கார்பன் சரிபார்ப்பு சான்றிதழைப் பெற்றுக்கொண்டது.
  • விசா டெபிட் கார்டுகளை இயக்கத்திற்கு கொண்டுவந்தது.
  • "Green" Asset Backed Securitization இணை தொடங்கியது.

சிடிசன்ஸ் டெவெலப்மன்ட் பிஸினஸ் பி.எல்.சி (சி.டி.பி) என்பது இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பல விருதுகளை வென்ற நிதி நிறுவனமாகும், இது இலங்கையில் உள்ள 46 வங்கி சாரா நிதி நிறுவனங்களில் (NBFI) முதல் ஐந்து பெரிய உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளது. சி.டி.பி., இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியத்தால் 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி வணிகச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்றது மற்றும் 2000 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க நிதி குத்தகை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பங்குச் சந்தையின் முதன்மை வாரியத்தில் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனம் ஆகும், எங்கள் கிளை வலையமைப்பு இலங்கையின் முக்கிய நகரங்களில் 71 ஆன்லைனில் இணைக்கப்பட்ட கிளைகளை கொண்டுள்ளது, அதே நேரத்தில் ரூ. 100 பில்லியனுக்கும் அதிகமான சொத்துமதிப்பினை கொண்டுள்ளது.

சி.டி.பி ஒரு வரையறுக்கப்பட்ட பொது நிறுவனமாக 1995 செப்டம்பர் 07 ஆம் தேதி 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது மற்றும் நிறுவன பதிவு எண் PB 232 PQ ஆகும், 2007 ஆம் ஆண்டின் 07 இலக்க நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் மீண்டும் பதிவு செய்யப்பட்டது. சி.டி.பி.க்கு Fitch Rating BBB (lka)/ RWN மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

சிடிபி வழங்கும் முக்கிய நிதி சேவைகளில் நிலையான வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், குத்தகை, தனிநபர் கடன்கள், வீட்டுக் கடன்கள், வாடகை கொள்முதல் நிதி, அடகுச் சேவை, கார்ப்பரேட் மற்றும் சில்லறை கடன், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வசதிகள் ஆகியவை நாடளாவோய ரீதியில் பரந்த ATM வலையமைப்பில் ஆதரிக்கப்படுகின்றன, வெளிநாட்டு நாணய பரிமாற்றம் , பெருநிறுவன நிதி சேவைகள். சி.டி.பி வழங்கும் பரந்த அளவிலான நிதி சேவைகள் இலங்கை குடிமக்களுக்கு மொத்த நிதி சேவை வழங்குநராக தொழில்துறையின் முன்னணியில் உள்ளது.