MasterCard LoungeKey நிகழ்ச்சி – அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

LoungeKey

வி: LoungeKey என்றால் என்ன?

ப: LoungeKey என்பது விமானநிலைய லோஞ்ச் திட்டமாகும், இதனூடாக அட்டைதாரர்களுக்கு தமது தகைமை பெற்ற MasterCard World & Platinum கடனட்டையை பிரவேசிப்பின் போது வழங்கி எளிதாக பிரவேசிக்கும் வாய்ப்பை வழங்குகின்றது. இதற்காக, தமது பணப் பையில் மேலதிமாக எந்தவொரு பிளாஸ்ரிக் அட்டைகளையும் தம்முடன் கொண்டு வர வேண்டியதில்லை.

விமான நிலைய லோஞ்ச் பகுதி அணுகலுக்காக www.loungekey.com/CDB என்பதை பார்க்கவும்

கே: முன்னுரிமை அனுமதியிலிருந்து எவ்வாறு LoungeKey வேறுபடுகின்றது?

ப: தகைமை வாய்ந்த MasterCard கொடுப்பனவு அட்டையை சமர்ப்பித்து பிரவேசிக்கும் வாய்ப்பை வழங்குவதாக உலகளாவிய ரீதியில் காணப்படும் லோஞ்ச் வலையமைப்பு காணப்படுகின்றது. அங்கத்துவ அட்டைகள் எதுவும் அவசியமில்லை. முன்னுரிமை அனுமதி என்பது, உலகளாவிய ரீதியில் காணப்படும் லோஞ்ச் பகுதிகளுக்கு அங்கத்தவர்களுக்கு தமது செல்லுபடியாகும் முன்னுரிமை அனுமதி அங்கத்துவ அட்டையை சமர்ப்பித்து பிரவேசிக்கும் வாய்ப்பை வழங்குகின்றது.

கே: LoungeKey இனால் நிர்வகிக்கப்படும் லோஞ்ச் பகுதிகள் காணப்படுகின்றனவா?

ப: இல்லை. LoungeKey இனால் லோஞ்ச் பகுதிகள் நிர்விக்கப்படுவதில்லை. இவை விமான நிலைய அதிகாரசபைகள், கையாளல் முகவர்கள் மற்றும் விமான சேவைகளால் நிர்வகிக்கப்படுகின்றன.

கே: LoungeKey மற்றும் முன்னுரிமை அனுமதி ஆகியன ஒரே லோஞ்ச் வலையமைப்பை பகிர்ந்து கொள்கின்றனவா?

ப: விமானசேவைகளுடன் பேணப்படும் உறவுகளின் காரணமாகவும், தொழில்நுட்ப தேவைப்பாடுகளின் பிரகாரமும், முன்னுரிமை அனுமதி லோஞ்ச் பகுதிகளின் முழுமையான அனுமதியை LoungeKey இனால் வழங்க முடியாதிருக்கும். சுமார் 90 சதவீமான முன்னுரிமை அனுமதி லோஞ்ச் பகுதிகளின் அணுகலை LoungeKey கொண்டிருக்கும்.

கே: எப்பகுதிகளில் LoungeKey லோஞ்ச்கள் அமைந்துள்ளன மற்றும் முன்னுரிமை அனுமதி வலையமைப்புடன் ஒப்பிடுகையில் காணப்படும் வேறுபாடுகள் யாவை?

ப: LoungeKey வலையமைப்பில் 800 க்கும் அதிகமான லோஞ்ச்கள் காணப்படுகின்றன. இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்படாத லோஞ்ச்களில், குறைந்த விஜயங்களைக் கொண்ட சிறு லோஞ்ச் பகுதிகள், LoungeKey இன் தொழில்நுட்ப தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ய முடியாத லோஞ்ச்கள் மற்றும் கொடுப்பனவு அட்டையுடன் அனுமதியை தவிர்க்கும் ஒப்பந்த உடன்படிக்கைகளை கொண்டிருக்கும் லோஞ்ச் பகுதிகள் போன்றன அடங்கியிருக்கும்.

கே: LoungeKey லோஞ்ச் பகுதியில் பிரவேசிப்பதற்கு முன்னுரிமை அனுமதி அட்டையை பயன்படுத்த முடியுமா?

ப: முன்னுரிமை அனுமதி மற்றும் LoungeKey ஆகியன இருவேறு லோஞ்ச் திட்டங்களாகும், இவை ஒன்றுக்கொன்று மாற்றிக் கொள்ள முடியாதவை. எவ்வாறாயினும், பல LoungeKey லோஞ்ச்கள், முன்னுரிமை அனுமதி லோஞ்ச்களாக அமைந்துள்ளன.

கே: LoungeKey லோஞ்ச்கள் பற்றிய தகவல்களை அட்டைதாரர்கள் எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம்?

ப: லோஞ்ச் தகவல்களை டவுன்லோட் செய்து (வசதி, படங்கள்) போன்றவற்றை தரவிறக்கம் செய்து மற்றும் தாம் பயணம் செய்யும் பகுதியில் காணப்படும் லோஞ்ச் வலையமைப்பு பற்றிய தகவல்களை பின்வரும் நாளிகைகளினூடாக பரிசோதித்து, அருகாமையிலுள்ள லோஞ்ச் பகுதியை பரிசோதித்துக் கொள்ளலாம்:

    • MasterCard LoungeKey Smartphone app (iOS மற்றும் Android)
    • MasterCard LoungeKey இணையத்தளம்

கே:அட்டைதாரர்கள் லோஞ்ச்களை அணுகியதும் வாடிக்கையாளர் பயணம் எவ்வாறு அமைந்திருக்கும்?

ப: LoungeKey லோஞ்ச் பகுதியில் அட்டைதாரர்கள் பிரவேசித்ததும், தமது தகைமை வாய்ந்த, செல்லுபடியாகும் “LoungeKey”எனக் குறிப்பிடப்பட்ட MasterCard ஐ வரவேற்பு பகுதியில் காண்பிக்க வேண்டும். தம்முடன் சமூகமளிக்கும் விருந்தினர்களின் எண்ணிக்கை பற்றியும் லோஞ்ச் காப்பாளருக்கு அறிவிக்க வேண்டும்.

LoungeKey card reader சாதனத்தில் MasterCard ஐ ஸ்வைப் செய்து பிரவேசிப்பதற்கு அட்டைதாரர் தகைமை கொண்டிருப்பதை லோஞ்ச் காப்பாளர் உறுதி செய்வார். மாறாக, பாதுகாப்பான இணையப் பக்கத்தில் அவர்களின் கொடுப்பனவு அட்டை இலக்கம் தட்டச்சினூடாக பதிவு செய்யப்படலாம்.

லோஞ்ச் விஜயம் மற்றும் விருந்தினர்கள் எண்ணிக்கையை உறுதி செய்வதற்காக card reader இல் கையொப்பமிடுமாறு கோருவர். கோரப்பட்டால், ரசீதும் வழங்கப்படும். அதன் பின்னர் லோஞ்ச் பகுதிக்கு அட்டைதாரர் பிரவேசிப்பார்.

ஒப்பற்ற வாடிக்கையாளர் அனுபவத்தை உறுதி செய்வதற்காக இந்த செயன்முறைகள் பற்றி உங்களின் அட்டைதாரர்களுக்கு தெரிவிப்பது முக்கியமானதாகும்.

கே: கொடுக்கல் வாங்கலொன்றின் போது அட்டைதாரரின் அட்டை PIN இலக்கமொன்றை கோரினால், அவர்கள் அதனை பதிய வேண்டுமா?

ப: அட்டைதாரர் எந்தவொரு PIN இலக்கத்தையும் பதிய வேண்டியதில்லை.

கே: அட்டைதாரருக்கு கையொப்பமிடுவதற்கு திரையில் என்ன காண்பிக்கப்படும்?

ப: திகதி, இடம் மற்றும் விருந்தினர்களின் எண்ணிக்கையை காண்பித்து, அட்டைதாரர் card reader இல் நேரடியாக ஒப்பமிடுவார்.

கே: லோஞ்ச் பகுதியினுள் விருந்தினர்களை அழைத்துச் செல்வதற்கான கொள்கை யாது?

ப: லோஞ்ச் பகுதியில் அட்டைதாரருடன் இணைந்து கொள்வதற்கு நண்பர்கள் மற்றும் விருந்தினர்கள் அழைக்கப்படலாம். விருந்தினர்களின் எண்ணிக்கையில் மட்டுப்படுத்தல்கள் இல்லை, எவ்வாறாயினும், ஏற்கனவே காணப்படுவோரின் எண்ணிக்கை மற்றும் தமது சொந்த கொள்கைகளின் பிரகாரம் விருந்தினர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் அதிகாரத்தை ஒவ்வொரு லோஞ்ச் பகுதியும் கொண்டிருக்கும். இணையத்தளம் மற்றும் Smartphone app இல் Lounge Finder பற்றிய விருந்தினர் கொள்கை பற்றிய தகவல்களை அட்டைதாரர்கள் பார்வையிடலாம். அட்டைதாரர்களின் விஜயங்களுடன், இந்த விருந்தினர் விஜயங்களும் அட்டைதாரர் கணக்குக்கு நேரடியாக கட்டணத்துக்கு சேர்க்கப்படும்.

கே: LoungeKey இனால் அழைப்பு நிலைய சேவைகள் எதுவும் வழங்கப்படுகின்றதா?

ப: LoungeKey இன் சேவை நிலையங்களினூடாக, அட்டைதாரர்களுக்கு 24/7வாடிக்கையாளர் சேவையை அணுக வேண்டும். Mastercard LoungeKey இணையத்தளம் மற்றும் Smartphone app இல் தகவல்களைப் பார்வையிட முடியும்.

கே: அழைப்பு நிலையத்தினால் எவ்வாறான சேவைகள் வழங்கப்படும்?

ப: அட்டைதாரரின் தகைமையை உறுதி செய்ய முடியும் என்பதுடன் லோஞ்ச் அமைவிடங்கள் மற்றும் அவற்றில் காணப்படும் வசதிகள் பற்றிய தகவல்களை சேவை நிலையம் வழங்கும்.

கே: LoungeKey க்கு லோஞ்ச் விஜய கட்டணம் யாது?

ப: சகல லோஞ்ச் விஜயங்களும் (விருந்தினர் விஜயங்கள் அடங்கலாக) நேரடியாக அட்டைதாரரின் கணக்கு விஜயமொன்றுக்கு நபர் ஒருவருக்கு US$32 என அறவிடப்படும்.

கே: அட்டைதாரர் மற்றும் விருந்தினர் விஜயங்களுக்கு எவ்வாறு கட்டணங்கள் அறவிடப்படுகின்றன?

ப: அட்டைதாரர்கள் மற்றும் அவர்களின் விருந்தினர்களால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு லோஞ்ச் விஜயங்களுக்கும் அட்டைதாரர்களிடமிருந்து நேரடியாக LoungeKey கட்டணம் அறவிடும்.

கே: CDB Mastercard கடனட்டை priceless Specials விசேடத்துவம் யாது?

ப: Mastercard வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான வழங்கப்படும் முற்பதிவு சேவையாக Priceless அமைந்துள்ளதுடன், பரந்தளவு அனுபவங்கள் மற்றும் சலுகைகளைக் கொண்டுள்ளது. உலகின் சகல பாகங்களிலிருந்தும் கவனமான முறையில் திரட்டப்பட்டதாக Mastercard Priceless Specials அமைந்துள்ளன. பிரயாணம், உணவு வகைகள், சொப்பிங், விளையாட்டு, களிப்பூட்டும் அம்சங்கள், கலை மற்றும் கலாசாரம், சேகரிப்புகள் போன்றன உங்களின் குடும்பத்தார், நண்பர்களுடன் அனுபவித்து மகிழக்கூடிய வகையில் அமைந்துள்ளன.

கே: CDB Mastercard கடனட்டைதாரர்களுக்கு காணப்படும் அனுகூலம் யாது?

ப: உங்களின் Priceless நகரினுள் காணப்படும் நிகழ்வுகளில் கவனம் செலுத்த முடியும் அல்லது உங்களின் பயணத்துடன் தொடர்புபட்டதாக அமைந்திருக்கும் வெளிநாட்டு நிகழ்வுகளை தேடிக் கொள்ளலாம்.
CDB Mastercard Credit card Priceless Specials சலுகைகள் பற்றி அறிந்து கொள்ள கீழே தரப்பட்டுள்ள லிங்கைப் பார்க்கவும்.

www1.mastercard.com/content/platinum/ap/en/index.html