மிகவும் பெறுமதி வாய்ந்த 50 சிறந்த நுகர்வோர் வர்த்தக நாமங்களில் ஒன்றாக CDB தெரிவு

  • ஒட்டுமொத்த வர்த்தக நாமத்தின் பெறுமதி சராசரிக்கும் மேலாக 22% இனால் உயர்வு

  • அடிப்படை கொள்கைகளின் தொடர்ச்சியான பயன்பாடு, நிலைத்திருக்கும் வர்த்தக நாமம் மற்றும் வர்த்தக நாமப் பங்கு ஆகியவற்றின் மூலமாகும்

அபிலாசைகளை வலுவூட்டல் எனும் தனது நோக்கத்துக்கமைய வர்த்தகச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பீஎல்சீ (CDB), தனது 25 வருட வரலாற்றில் மற்றுமொரு மைல்கல் சாதனையை எய்தியுள்ளது. தொடர்ச்சியாக LMD Top 100 தரப்படுத்தலில் CDB தனது பிரசன்னத்தைக் கொண்டிருந்ததுடன், இலங்கையின் மிகவும் பெறுமதி வாய்ந்த 50 சிறந்த நுகர்வோர் வர்த்தக நாமங்கள் வரிசையில் இவ்வருடம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. முன்னணி வர்த்தக நாம பெறுமதி மற்றும் மூலோபாய நிறுவனமான பிரான்ட் ஃபினான்ஸ் மற்றும் வியாபார சஞ்சிகையான LMD ஆகியன இணைந்து 18 ஆவது தடவையாக இந்த வருடாந்த மீளாய்வை முன்னெடுத்திருந்தன.

ஒட்டுமொத்த வர்த்தக நாமப் பெறுமதி 22 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. இது வர்த்தக நாமப் பெறுமதியின் சராசரி அதிகரிப்பையும் விட மேலாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், நுகர்வோர் ஈடுபாட்டில் பிரதான பெறுமதிகளான விடாமுயற்சி, கரிசனை, புத்தாக்கம் மற்றும் நம்பகத்தன்மை போன்றவை வர்த்தக நாமப் பெறுமதி அதிகரிப்புக்கு ஏதுவாக அமைந்திருந்தன. நுகர்வோர் செயற்பாடுகள் மற்றும் நிதியியல் அளவுகோல்களினதும் சுயாதீன சந்தை ஆய்வுகள் மற்றும் பொதுவாகக் கிடைக்கும் நிதித் தகவல்கள் போன்றவற்றினதும் அடிப்படையில் இந்தத் தரப்படுத்தல்கள் அமைந்துள்ளமை இதற்கு ஆதாரமாகும்.

CDB இன் Chief Emergent Business Officer, கார்த்திக் இளங்கோவன் கருத்துத் தெரிவிக்கையில், “எமது அணியின் ஒட்டுமொத்த ஊக்குவிப்புக் காரணி நாம் முகம் கொடுக்கும் சவால்களாகும். சவால்கள் நிறைந்த காலப்பகுதியிலும் எம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு இது பெரிதும் உதவியிருந்தது.” என கூறினார். கடந்த ஆண்டில் CDB இரு பிரதான நம்பிக்கைகளின் அடிப்படையில் இயங்கியிருந்தது. அதாவது, தயாரிப்புகள் மற்றும் சேவைகளை தொடர்ந்தும் வழங்குவதை உறுதிப்படுத்த அதன் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் நோய் தொற்றிலிருந்து அணியினர் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதலாகும்.
“எதிர்காலத்தின் வழிகாட்டியாக தொழில்நுட்பம் அமைந்திருக்கும் என்பதை உணர்ந்து, எமது தொழில்நுட்ப கட்டமைப்புகளை நாம் தயார்ப்படுத்தியுள்ளோம். புத்தாக்கத்தினூடாக நபர்களுக்கிடையிலான ஈடுபாட்டை ஒன்றிணைத்து, எமது சேவைகளை ஒப்பற்ற வகையில் வாடிக்கையாளர்களுக்கு சென்றடையச் செய்யும் வகையில் எமது அணியினர் தயார்ப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் நாம் அதிகளவு வரவேற்பைப் பெற்றுள்ளோம்.” என்றார்.

தனது சேவைத் தரங்கள் எதிர்பார்ப்புகளை விஞ்சியதாக அமைந்திருப்பதாக தொடர்ச்சியாக CDB வெளிப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் பரந்த தீர்வுகள், தொடர்ச்சியாக மாற்றமடைந்து செல்லும் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் மாற்றமடைந்த வண்ணமுள்ளன. கார்த்திக் தொடர்ந்து குறிப்பிடுகையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு இது பொருத்தமானதாக அமைந்திருப்பதுடன், தொடர்ச்சியாக எம்மீது எமது வாடிக்கையாளர்கள் காண்பிக்கும் நம்பிக்கை மற்றும் வரவேற்புக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். எமது வர்த்தக நாமம், வாடிக்கையாளர்களின் உள்ளங்களில் உறுதியான இடத்தைப் பிடித்துள்ளதுடன், அதன் காரணமாக எம்மால் உயர்ந்த நிலையை நோக்கி பயணிக்கக்கூடியதாக உள்ளது. எமது பரஸ்பர வெற்றிகரமான செயற்பாடுகளின் உண்மையான பங்காளராக திகழ்கின்றமைக்காக எமது வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றார்.


கார்த்திக் இளங்கோவன் – பணிப்பாளர் / Chief Emergent Business Officer – CDB