SLASSCOM’இன் தேசிய Ingenuity விருதுகள் 2022 இல் CDB விருதை சுவீகரிப்பு

• மிகவும் புத்தாக்கமான சர்வதேச வியாபார சேவை/BPM எனும் தேசிய வெற்றியாளர் விருதை சுவீகரிப்பு
• முன்னணி கடன் வழங்கல் செயன்முறை தன்னியக்கமயமாக்கல் செயற்திட்டதுக்காக விருது வழங்கி கௌரவிப்பு

பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான வகையில் திகழ்வதற்காகவும், புத்தாக்கமான சேவைகளை தொடர்ச்சியாக பெற்றுக் கொடுப்பதற்காகவும், சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) அண்மையில் இடம்பெற்ற தேசிய Ingenuity விருதுகள் 2022 நிகழ்வில் மிகவும் புத்தாக்கமான சர்வதேச வியாபார சேவை/BPM எனும் தேசிய வெற்றியாளர் விருதை சுவீகரித்திருந்தது. Sri Lanka Association for Software and Services Companies (SLASSCOM) இனால் இந்த விருது வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

2022 ஜுலை 1ஆம் திகதி இடம்பெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்வில், CDB இன் முன்னணி கடன் வழங்கும் தன்னியக்க மயமாக்கல் செயன்முறை விருதுகளை வென்றிருந்தது. இலங்கையின் நிதிச் சேவைகள் தொழிற்துறையில் இந்த புரட்சிகரமான திட்டத்தின் அறிமுகம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்ததுடன், குறைந்தளவு மனித ஈடுபாட்டுடன் இயங்கும் தன்னியக்க செயன்முறை வசதியை கடன் வழங்கல் பிரிவில் ஏற்படுத்த உதவியிருந்தது.

இந்த சாதனை தொடர்பில் CDB இன் வணிக செயற்பாடுகளுக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் டேவ் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “CDB ஐச் சேர்ந்த நாம் பாரம்பரிய எல்லைகளுக்கு அப்பால் சிந்தித்து செயலாற்றுவதற்கும் உயர்ந்த பெறுமதியைக் கொண்டிருப்பதற்கும் ஊக்குவிக்கப்பட்டுள்ளதுடன், மாற்றத்தை பின்பற்றிய வண்ணமுள்ளோம். எமது முயற்சிகளுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக இந்த விருதை நாம் வெற்றியீட்டியுள்ளமை அமைந்துள்ளது. செயன்முறை தன்னியக்கமயமாக்கத்தினூடாக, முழு கிளை வலையமைப்புக்கும் அப்பால் சென்று, எமது அணியினருக்கு எங்கிருந்தும் எந்நேரத்திலும் பயணியாற்றக்கூடிய வசதியை ஏற்படுத்தியுள்ளோம். அதனூடாக எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு சகல ஒழுக்க விதிமுறைகளையும் பின்பற்றி, சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது. துரித மற்றும் துல்லியமான கடன் தீர்மானத்தை வழங்குவது எமது இலக்காக அமைந்திருப்பதுடன், கடன் வழங்கல் செயன்முறை தன்னியக்கமாக்கல் செயற்திட்டத்தினூடாக 70% க்கு அதிகமான எமது கடன் வழங்கல் தீர்மானங்கள் இயந்திரத்தின் வேகத்தில் இடம்பெறுகின்றன. இந்த செயன்முறையினூடாக எமது நிறுவனத்தினுள் காணப்படும் மேலதிக ஊழியர்களை செயன்முறைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு உதவியுள்ளதுடன், கடதாசி பாவனையற்ற பணியாற்றும் சூழலை ஏற்படுத்தியுள்ளதுடன், எமது விற்பனை அணியினரின் கிளைகளுக்கான பயணங்களையும் குறைத்துக் கொள்ள உதவியுள்ளது. எமது தொழில்நுட்ப புரட்சி மற்றும் நிலைபேறாண்மை தந்திரோபாயத்துக்கும் பங்களிப்பு செய்கின்றது.” என்றார்.

cdb

பட விளக்கம்: இடமிருந்து – முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா தென்னகோன், CDB தகவல் தொழில்நுட்ப பிரிவு சிரேஷ்ட பிரதி முகாமையாளர் மனீஷ டி சில்வா, CDB வியாபார செயற்பாடுகள் பிரிவின் பணிப்பாளர் டேவ் டி சில்வா, CDB வியாபார செயற்பாடுகளின் முகாமையாளர் ஷப்னி மொஹைதீன் ஆகியோர் இலங்கை நோர்வே தூதரகத்தின் சிரேஷ்ட ஆலோசகர் சுந்தரி ஜயசூரிய உடன் காணப்படுகின்றனர்.