எதிர்பாரா சவால்களையும் மீறி வெற்றிகரமாக 2019/20 ஐ நிறைவு செய்த CDB

  • இவ்வருடத்துக்கான குழுமத்தின் வரிக்குப் பிந்திய இலாபம் ரூ .1.8 பில்லியன்

  • 2020/21 ஆண்டின் முதல் காலாண்டின் மொத்த சொத்து மதிப்பு ரூ .96.7 பில்லியன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் COVID-19 ஆகியவற்றின் பின்னணியில் ஏற்பட்ட கடும் பொருளாதார ஸ்திரமின்மையை வெற்றிகரமாக எதிர்க்கொண்டு சிட்டிஸன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பீஎல்சீ (CDB) நிறுவனமானது 2019/20 நிதியாண்டை ரூ .1.8 பில்லியன் வரிக்குப் வரிக்குப் பிந்திய இலாபத்துடன் சிறந்த முறையில் முடித்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.6% வளர்ச்சிப் போக்கை காண்பிக்கிறது.

ஜூன் 30, 2020 நிலவரப்படி ரூ. 96.7 பில்லியன் மொத்த சொத்து மதிப்பையும், ரூ. 487.9 மில்லியனுக்கான வரிக்குப் பிந்திய இலாபத்தையும் பதிவு செய்ததன் ஊடாக 2020/21 நிதியாண்டின் முதல் காலாண்டில் கோவிட் -19 முடக்கத்தின் தாக்கத்தை சிறந்த முறையில் எதிர்கொண்டமையை நிறுவனம் நிரூபித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 63% ஆன குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். சமீபத்தில் கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) வெளியிடப்பட்ட 2020 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான குழுமதத்தின் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் மற்றும் 2020 ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டிற்கான இடைக்கால முடிவுகளின் பிரகாரமே இந்த பெறுபேறுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சவாலான காலகட்டத்தில் நிறுவனத்தின் முன்னேற்றம் குறித்து CDB இன் நிர்வாக பணிப்பாளர் / தலைமை நிர்வாக அதிகாரி மஹேஷ் நானாயக்கார மகிழ்ச்சியடைந்துள்ளார். “எங்கள் டிஜிட்டல் மற்றும் இலத்திரனியல் வர்த்தகம் சார்ந்த வணிக மூலோபாயத்துடன், எங்கள் வணிகத்தில் நிலைத்தன்மையை ஒருங்கிணைப்பதன் மூலம், COVID-19 க்கு பிந்தைய சகாப்தத்தில் வலுவான செயல்திறன் கொண்ட ஒரு ஸ்திரமான நிலையை CDB நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது.” என்று அவர் கருத்து தெரிவித்தார்.

நுகர்வோர் நடத்தை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் பரவலான இடையூறுகள் இருந்தபோதிலும், CDB 2019/20 நிதியாண்டில் 3% வருடாந்த வளர்ச்சி விகிதத்துடன் ரூ .174 பில்லியன் வருவாயை அடைந்தது. நிகர வட்டி வருமானம் 21%இனால் அதிகரித்து ரூ .6.6 பில்லியனாக பதிவாகிய அதே நேரத்தில், நிறுவனமானது குழுமத்தின் வரிக்கு முந்தைய இலாபத்தை ரூ .2.3 பில்லியனாக பேணியுள்ளது. ஆண்டு முடிவில் CDB இன் ஒருங்கிணைந்த மொத்த சொத்து மதிப்பு ரூ .93.2 பில்லியனாக இருந்த அதேவேளை நிகர சொத்துக்களின் தேறிய பெறுமதி ரூ. 11.6 பில்லியன் ஆக பதிவாகியது. வருமானத்துக்கான செலவு விகிதாசாரம் தொடர்ச்சியாக 48.79% ஆக முன்னேற்றம் கண்ட அதே நேரத்தில் சொத்துக்களுக்கான வருவாய் விகிதாசாரம் 1.98% ஆகவும், சாதாரண பங்கு மீதான வருமானம் 17.99% ஆகவும் இருந்தன. ஒரு பங்கின் வருவாய் ரூ .26.15 ஆகவும், ஒரு பங்கின் நிகர சொத்து மதிப்பு ரூ.164.76 ஆகவும் காணப்பட்டன.

ஆண்டின் பெரும்பகுதியில் பொருளாதார ரீதியில் நிச்சயமற்ற தன்மை நிலவிய போதிலும், CDB உரிமைப் பங்கு வழங்கலை (rights issue) வெற்றிகரமாக மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. பங்குதாரர்களால் முழுச் சந்தா பெறப்பட்ட இப்பங்கு வழங்கள் ஊடாக ரூ.1,019 மில்லியனுக்கான புதிய மூலதனத்தை நிறுவனம் பெற்றுக்கொண்டது. இது CDB இன் சொத்து மதிப்பினை மேலும் வலுப்படுத்தியதுடன் நிறுவனத்தின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் நிரூபித்தது. CDB இன் வலுவான சொத்து மதிப்பில் 90% ஆனது சொத்துக்கள் மீதான கடன் பெறுவனவுகள் உள்ளடங்களாக சீரிய பணப்பாய்ச்சல், வருமானமீட்டும் சொத்துக்களாகவுள்ளன. மேலும், வட்டி சார் நிதிக்கட்டமைப்பில் பண வைப்பு மற்றும் கடன் கொடுப்பனவு விகிதாசாரமானது 57% க்கு 43% என்ற அடிப்படையில் உள்ளமை நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் ஒரு ஆரோக்கியமான முதிர்வு நிலையைக் கொண்டுள்ளதை பறை சாற்றுகின்றது.

CDB இன் வினைத்திறன்மிக்க செயற்பாடுகள் 2020/21 புதிய நிதியாண்டின் முதல் காலாண்டிலும் நீடித்தன. முதல் காலாண்டின் முடிவில், CDB இன் மொத்த சொத்து மதிப்பு ரூ .96.7 பில்லியனை எட்டியது. வரிக்குப் பிந்திய இலாபம் 63%ஆல் அதிகரித்து ரூ .487.9 மில்லியனை எட்டியது. CDB இன் முதல் கட்ட (tier I) மற்றும் இரண்டாம் கட்ட (tier II) மூலதன விகிதங்கள் முறையே 10.14% மற்றும் 12.87% ஆகவிருந்தன, இது சட்டக்கட்டுப்பாட்டு மட்டத்தை விட உயர்வான பெறுபேறாகும். 18.49% இல் உள்ள பணப்புழக்க விகிதம் சட்டக்கட்டுப்பாட்டு குறைந்தபட்ச மட்டமான 6% ஐ விடவும் அதிகமாக உள்ளது. இதற்கிடையில், சுழலும் வீச்சு பங்குகள் (revolving yard stocks) உட்பட மொத்த செயல்படா கடன் (NPL) விகிதம் கணிசமாக அதிகரித்து 7.93% ஆக்கவுள்ளது. நிகர அடிப்படையில், சுழலும் வீச்சு பங்குகளைத் (revolving yard stocks) தவிர்த்து, மொத்த செயல்படா கடன் அடைவு மட்டம் 2.68% ஆக பதிவாகியது. கடந்த காலாண்டில் (31 மார்ச் 2020) இவ்வடைவு மட்டங்கள் முறையே 7.57% மற்றும் 2.55% ஆக பதிவாகியிருந்தன.

குத்தகை துறையில் பிரசித்தி பெற்ற CDBஇன் துணை நிறுவனமான யுனிசன்ஸ் கெபிடல் லீசிங் லிமிடட் (UCL) மத்திய வங்கியின் நிதித்துறைசார் ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டமை இக்காலாண்டில் CDBஇனால் அடையப்பெற்ற இன்னுமொரு சிறந்த பெறுபேறாகும்.

ஏராளமான கௌரவங்களுடன் CDB ஆனது இவ்வாண்டிலும் வெற்றிநடை போடுகின்றது. CDB அதன் 24 வருட வரலாற்றில் முதல் முறையாக பிஸ்னஸ் டுடே சஞ்சிகையின் (Business Today Top 30) “முதல் முப்பது “தரப்படுத்தலில் இடம் பிடித்ததுடன் இலங்கையின் சிறந்த நிலையான வர்த்தக நிறுவனங்களுக்கான (Best Corporate Citizens Sustainability Awards) விருது வழங்கல் நிகழ்வில் முதல் 10 இடங்களுக்குள் தரப்படுத்தப்பட்டிருந்ததோடு சிறந்த வணிக நிறுவனங்களுக்கான தேசிய விருது வழங்கல் நிகழ்வில் (National Business Excellence Awards) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் துறையில் தங்க விருதினை வென்றிருந்தது. வெற்றிபெறும் உத்வேகம், உறுதிப்பாடு மற்றும் ஆர்வத்தால் தூண்டப்பட்ட அணியைக் கொண்ட வலுவான, நிலையான மற்றும் தொலைநோக்குடைய CDB ஆனது, COVID-19 க்கு பிந்தைய சகாப்தத்தில் முன்னேறுகிறது.