சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலைபேறாண்மை விருதுகள் 2020 இல் சிறந்த பத்து நிறுவனங்கள் வரிசையில் CDB க்கு கௌரவிப்பு

இலங்கையின் முன்னணி வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமான சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB), அண்மையில் இடம்பெற்ற சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலைபேறாண்மை விருதுகள் 2020 இல் இலங்கையின் சிறந்த பத்து கூட்டாண்மை நிறுவனங்களில் ஒன்றாக கௌரவிக்கப்பட்டிருந்தது. நான்காவது தடவையாக CDB கௌரவிக்கப்பட்டிருந்ததுடன், இதில் 2018 – 2020 வரை மூன்று தடவைகள் தொடர்ச்சியாக விருதை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. சகல பிரிவுகளிலும் நீண்ட காலமாக நிலைபேறான வியாபார செயன்முறைகளை முன்னெடுப்பதற்கு காண்பித்திருந்த அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் CDB க்கு இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் நிலைபேறாண்மை தொடர்பில் உள்நாட்டு நிறுவனங்கள் காண்பித்திருந்த முயற்சிகளையும் புதிய செயற்திட்டங்களையும் கௌரவிக்கும் வகையில் வருடாந்தம் சிறந்த கூட்டாண்மை குடிமகன் விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றது. சூழல், சமூகம், பொருளாதாரம் மற்றும் ஒழுக்க செயன்முறைகள் போன்றவற்றில் இந்தச் செயற்பாடுகளின் தாக்கம் மற்றும் உள்ளம்சங்கள் போன்றன பலதுறைசார் நிபுணர்களினால் பல்வேறு கட்டங்களில் மதிப்பீடு செய்யப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுகின்றனர்.

பொதுப் பட்டியலிடப்பட்ட கூட்டாண்மை நிறுவனமாக சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) திகழ்வதுடன், இலங்கையில் காணப்படும் சிறந்த ஐந்து வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்கின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த பிரச்சனத்தைக் கொண்டுள்ளதுடன், இலங்கையில் நிதிச் சேவைகள் முன்னெடுக்கப்படுவதில் புரட்சிகரமான மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இடமிருந்து: CDB சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலைபேறாண்மை விருதுகள் தெரிவுக்குழுவின் தவிசாளர் கலாநிதி. ஆனந்த மல்லவதந்திரி, CDB இன் நிறைவேற்றுப் பணிப்பாளர்/பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி/பிரதம நிதி அதிகாரி தமித் தென்னகோன், CDB இன் நிலைபேறாண்மை தலைமை அதிகாரி/திறன் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி அரோஷி ரணதுங்க, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தவிசாளர் கலாநிதி. ஹான்ஸ் விஜயசூரிய, CDB இன் புத்தாக்கம் மற்றும் வியாபார புலனாய்வு பொது முகாமையாளர் ஹசித தசநாயக்க மற்றும் CDB இன் நிலைபேறாண்மை செயற்பாடுகளுக்கான சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி ஒவினி டயஸ் ஆகியோர் காணப்படுகின்றனர்.