சிறந்த எதிர்காலத்துக்காக CDB’இன் மனித வளங்கள் செயற்பாடுகள் சூழலுக்கு நட்பானதாக மாற்றம்

கொழும்பு, பெப்ரவரி 17, 2022 – தனது வியாபார தந்திரோபாயத்தில் நிலைபேறான செயற்பாடுகளை உள்வாங்குகின்றமைக்காக சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி கௌரவிக்கப்பட்டுள்ள நிலையில், தனது மனித வளங்கள் செயற்பாடுகளையும் சூழலுக்கு நட்பான பொருளாதாரத்துடன் தொடர்புடைய சிறந்த செயன்முறைகளுடன் ஒன்றிணைக்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது. “சூழலுக்கு நட்பான பொருளாதாரத்தை முன்னேற்றுவது” எனும் தனது உறுதிமொழிக்கமைய, சூழலுக்கு நட்பான ஊழியர் அணியை உருவாக்கி, நிறுவனத்தின் சூழலுக்கு நட்பான கலாசாரத்தை புரிந்து செயலாற்றுவதற்கு ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள CDB முன்வந்துள்ளது.

CDB இன் சூழலுக்கு நட்பான மனித வளங்கள் முகாமைத்துவம் (GHRM) தந்திரோபாயத்தினூடாக நிறுவனத்தினுள் வளங்களை நிலைபேறான வகையில் பயன்படுத்தும் கலாசாரத்தை ஊக்குவித்தல் மற்றும் சூழல் நிலைபேறான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற மனித வளங்கள் முகாமைத்துவ கொள்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. CDB இல் GHRM, சூழலுக்கு நட்பான பணியாளர்களை உருவாக்குவதில் நேரடியாக பொறுப்பு வாய்ந்ததாக அமைந்திருப்பதுடன், அது தனிநபர்கள், சமூகம், இயற்கை, சூழல் மற்றும் வியாபாரம் போன்றவற்றுக்கு நீண்ட கால அடிப்படையில் அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும். நிலைபேறான கலாசாரத்தை உருவாக்குவதில் மனித வளங்கள் பிரிவு முக்கிய பங்கை வகிக்க முடியும் என்பதுடன், அணிகளுக்குள் சூழலுக்கு நட்பான பெறுமதிகளை ஒன்றிணைப்பதில் அவசியமான ஊழியர் ஈடுபாட்டை வழிநடத்தும்.
CDB இன் நிறைவேற்று பணிப்பாளர்/கூட்டாண்மை நிதியியல் ரொஷான் அபேகுணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “CDB இல் GHRM செயற்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக சிறிய படிமுறைகளை நாம் எடுத்து வைத்துள்ளோம். கிளைகளில் விளக்கு ஆளி உணரிகள் (light switch sensors) ஸ்தாபிப்பு மற்றும் சூரிய ஒளியில் இயங்கும் மின் விளக்குகள் அறிமுகம், கார்களில் பகிர்வு அடிப்படையில் பயணிப்பது மற்றும் ஊழியர்களை இயலுமானவரை இலத்திரனியல் அல்லது ஹைபிரிட் வாகனங்களை பயன்படுத்த ஊக்குவிப்பது போன்றவற்றினூடாக 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க வலுவை நோக்கிய மாற்றத்தை ஆரம்பித்தது. மெய் நிகர் நேர்காணல்கள் மற்றும் e-கற்றல் கட்டமைப்புகள் போன்றவற்றை எமது ஊழியர்களுக்கு வழங்குகின்றோம்.” என்றார்.
தொழிலுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள், சூழலுக்கு நட்பான வினைத்திறன் முகாமைத்துவம், கற்றல் மற்றும் விருத்தி, வெகுமதிகள் மற்றும் அனுகூலங்கள் மற்றும் ஊழியர் உறவுகள் போன்றவற்றில் மத்தியில் சூழலுக்கு நட்பான முறைமைகளை பின்பற்றும் மனநிலையை உருவாக்குவதில் GHRM கவனம் செலுத்துகின்றது. அடுத்த 3 வருட காலப்பகுதியினுள் முற்றிலும் கடதாசி பாவனையற்ற நிறுவனத்தை உருவாக்குவது, இயற்கை மூலங்களை பாதுகாக்கும் வகையில் கடதாசி பாவனையை குறைப்பது அல்லது இல்லாமல் செய்வது, சூழல் மாசடைவதை தவிர்ப்பது மற்றும் நீர் மற்றும் வலு விரயத்தை தவிர்ப்பது போன்றவற்றுக்கான செயற்திட்டத்தை நிறுவனம் வடிவமைத்துள்ளது. உயர் தொழில்நுட்ப வினைத்திறனை நோக்கிய பாரிய நகர்வாக, CDB இனால் செயற்பாடுகள் பிரிவில் Robotic Process Automation (RPA) முறைமையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அபேகுணவர்தன மேலும் தெரிவிக்கையில், “எமது சகல சந்திப்புகள், பயிற்சி அமர்வுகள் மற்றும் இதர செயற்பாடுகளில் பிளாஸ்திக் தண்ணீர் போத்தல்களின் பயன்பாட்டுக்கு CDB தடை விதித்துள்ளது. நிறுவனத்தினுள்ளேயும், நிறுவனத்தில் இடம்பெறும் வைபவங்களிலும் ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்திக் பொருட்களின் பயன்பாட்டை மட்டுப்படுத்திக் குறைப்பது தொடர்பிலும் நாம் தீர்மானித்துள்ளோம். உள்ளக அலங்காரங்கள் ஒரு தடவைப் பாவனை மூலப்பொருட்களைக் கொண்டு மேற்கொள்ளப்படாது. மாறாக, சூழலுக்கு நட்பான, நிலைபேறான பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்படும். நிலைபேறான மற்றும் சூழலுக்கு நட்பான சூழலை கட்டியெழுப்ப நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

CDB இனால் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த “CDB Advance Roof Solar,” என்பது சகல பணியாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு புதுப்பிக்கத்தக்க வலுவை பயன்படுத்த உதவும் நீண்ட கால நிதியளிப்பு மற்றும் முதலீட்டுத் தெரிவாக சூழலுக்கு நட்பான நடவடிக்கையாக அமைந்துள்ளது. இந்தத் தீர்வுடன், வாடிக்கையாளர்களை அதிகம் நிலைபேறான வழிமுறைக்கு தம்மை மாற்றிக் கொள்வதற்கு ஊக்கமளிக்கும் தனது முயற்சிகளை CDB அதிகரித்துள்ளதுடன், தினசரி வாழ்க்கையில் அதிகளவு நிலைபேறான செயன்முறைகளை பின்பற்றுவதை தூண்டுவதை இலக்காக் கொண்டுள்ளது.

CDB பற்றி
இலங்கையின் சிறந்த சூழலுக்கு நட்பான பத்து நிறுவனங்களிலும், மாபெரும் வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் ஐந்தினுள்ளும் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) திகழ்கின்றது. நாடு முழுவதிலும் பரந்த கிளை வலையமைப்பினூடாக நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு இந்நாட்டில் நிதிச் சேவைகளை வழங்குகின்றது. மேலதிக தகவல்களுக்காக www.cdb.lk எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்.