நிலைபேறாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுவுக்கான தேவை – ஒரு கூட்டாண்மை சமூகப் பார்வை

தொகுப்பு தமித் தென்னகோன், பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதம நிதி அதிகாரி, சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி

நாம் புவியின் வளங்களை சுரண்டிய வண்ணமுள்ளோம். இவ்வாறான செயற்பாடுகளை நாம் அவதானத்துடன் மேற்கொள்ளாவிடின், எதிர்காலத்தில் எம்மைப் பாதுகாப்பதற்கு புவி இருக்காது. காலநிலை மாற்ற அறிக்கை தொடர்பான அரசங்காங்களுக்கிடையிலான குழுவின் பிரகாரம் – காலநிலை மாற்றம் என்பது முன்னொரு போதுமில்லாத வகையில் தற்போது மிகவும் வேகமாக இடம்பெறுவதுடன் – கடந்த நூற்றாண்டுகளை விட துரிதமாகவும் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. உடனடியாக சீராக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிடின், மற்றும் அடுத்து வரும் தசாப்த காலங்களில் வெளியேற்றப்படும் பச்சை இல்ல வாயுக்களை பெருமளவு கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காவிடின், புவி வெப்பமயமாதல் 1.5 பாகை செல்சியஸினால் அதிகரிக்கும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எம்மைச் சூழ்ந்து இதற்கான ஆதாரம் காணப்படுகின்றது. எம்மால் என்ன செய்ய முடியும் மற்றும் செய்ய வேண்டும் எனும் கேள்வி எம்முன்னால் காணப்படுகின்றது.

CDB இனால் மேற்கொள்ளப்படும் சகல தந்திரோபாய தீர்மானங்களிலும் தாக்கம் செலுத்தும் காரணியாக இந்த வினா அமைந்துள்ளது. நாம் கடந்து வந்துள்ள பயணத்தில் நிலைபேறாண்மைக்கு நாம் முன்னுரிமையளித்து, மதிநுட்பமான மற்றும் நிலைபேறான இலங்கைக்கு வலுச்சேர்த்துள்ளோம். வியாபாரமாக நாம் வளர்ச்சியடைந்து இலாபமீட்டுவதற்காக என்பதற்காகவன்றி, ஆரோக்கியமான புவியில், ஆரோக்கியமான நபர்களுடன் வியாபாரச் செயற்பாடுகளை முன்னெடுக்க நாம் விரும்புகின்றமையாலாகும். சூழல் மற்றும் நிலைபேறாண்மை பற்றிய இவ்வாறான மும்முனை தந்திரோபாயத் திட்டத்தை ஐக்கிய நாடுகள் மற்றும் இதர சர்வதேச அமைப்புகள்  பல தசாப்த காலமாக வலியுறுத்துகின்றன. இந்தப் பிரச்சனையில் உலகம் “தற்போது அல்லது இனி ஒரு போதுமில்லை” எனும் நிலையை எதிர்நோக்கியுள்ளது.

காபனீரொட்சைட் வெளியேற்றத்தைக் குறைத்து, நிகர பூச்சிய மட்டத்தை எய்தி, மனிதனால் ஏற்படுத்தப்படும் புவி வெப்பமயமாதல் மற்றும் அதனால் ஏற்படும் சகல இயற்கை அழிவுகளைக் குறைப்பது என்பது உடனடித் தேவையாக அமைந்துள்ளது. நடைமுறையில் கருதினால், கனிம எரிபொருள் நுகர்வை குறைத்து, படிப்படியாக இல்லாமல் செய்வது, மற்றும் மாற்று வலு மூலங்களை நாடி, புவிக்கு குறைந்தளவு பாதிப்புகளுடன் தொழிற்துறையை தொடர்ந்தும் இயங்கச் செய்வது என்பதாக அமைந்துள்ளது. நிபுணர்களின் பிரகாரம், இந்த நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளாவிடின், தொடர்ச்சியான மற்றும் பாரதூரமான வெப்பமான வானிலைகள், கடல்சார் வெப்ப அலைகள், அளவுக்கதிகமான பனிப் பொழிவு, சில பிராந்தியங்களில் விவசாய மற்றும் சூழல்சார் வரட்சி, பாரதூரமான பருவ புயல்காற்றுகள் மற்றும் ஆர்டிக் கடல் உறைபனி, பனிமலைகள் போன்றவற்றில் இழப்பு போன்றவற்றை அவதானிக்கக்கூடியதாக இருக்கும். இவற்றில் சில பாதிப்புகளை மீட்க முடியாது என்பதுடன் அவை அனைத்தும் சேதங்களை ஏற்படுத்தக்கூடியன.

Net Zero Future மற்றும் பசுமைப் பொருளாதாரம் (Green Economy) என்பதில் முதலீடு செய்வது தொடர்பில் CDB ஐச் சேர்ந்த நாம் தீர்மானித்துள்ளோம். எமது நிலைபேறான அர்ப்பணிப்புக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனம் எனும் வகையில் – தொடர்ச்சியாக நான்கு வருடங்களாக சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலைபேறாண்மை விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறந்த 10 நிறுவனங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளோம். சூழலுக்கு நட்பான பொருளாதாரத்தை மேம்படுத்தி, 2030 ஆம் ஆண்டளவில் நிலைபேறான நிதியியல் பிரிவில் முன்னோடியாகத் திகழ்வது என்பதை நோக்கி நாம் பணியாற்றுகின்றோம். 

இந்த நீண்ட கால திட்டத்தில் CDB இன் முதலாவது கவனம் என்பது, கூரை மீதான சூரியப் படல் நிதியளிப்பில் கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது.  தற்போதைய நிலையை கவனத்தில் கொள்ளும் போது, கனிம எரிபொருளுக்கு மாற்றீடாக உலகளாவிய ரீதியில் நீர் மின் உற்பத்திக்கு மேலதிகமாக, மூன்று மாதிரியான புதுப்பிக்கத் தக்க வலு கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. அணு, காற்று மற்றும் சூரிய வலு போன்றன அவையாகும். இவற்றில் எம்மைப் போன்ற நாடுகளுக்கு அணு வலு என்பது சாத்தியக்கூறு அற்றது. காற்றாலைகளை நிறுவுவதற்கு பெருமளவு தொகையை முதலீடு செய்ய வேண்டி இருக்கும். எவ்வாறாயினும், சூரிய வலு என்பது எம்மால் தாங்கிக் கொள்ளக்கூடிய வலு மூலமாக அமைந்துள்ளது. எமது நாட்டுக்கு வருடம் முழுவதிலும் தொடர்ச்சியாக இயற்கையாகவே கிடைக்கும் சூரிய ஒளியிலிருந்து உச்சப் பயனைப் பெற்றுக் கொள்ளாமை என்பது கவலையளிக்கும் விடயமாக அமைந்துளு்ளது.

2019 ஆம் ஆண்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையில் 12.8 மில்லியன் டொன்கள் எண்ணெய்க்கு நிகரான வலு பயன்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பிரதான வலு விநியோகத்தில் பெற்றோலியப் பொருட்கள் 43% பங்கை வகித்திருந்தன. பயோமாஸ் 37% பங்கையும் நிலக்கரி 11% பங்கையும் வழங்கியிருந்தன. இவை மிகவும் உயர்ந்த பெறுமதிகளாக அமைந்திருப்பதுடன், பயன்பாடு அதிகரிப்பின் காரணமாக தொடர்ந்தும் வேகமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதே அறிக்கையின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டில் இலங்கையின் தனிநபர் மின்சார நுகர்வு என்பது நபர் ஒருவருக்கு 626 kWh ஆக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சராசரியாக நான்கு பேரைக் கொண்ட குடும்பத்தின் மாதமொன்றில் 200 kWh விட சற்று அதிகமான பெறுமதியை கொண்டதாக அமைந்துள்ளது. கனிம எண்ணெய்யை எரிப்பதனூடாக பெருமளவான வலு பிறப்பிக்கப்படுவதுடன், எமது கூரைகளில் வருடம் முழுவதிலும் ஏற்றப்படும் வெப்பம் பயன்படுத்தப்படுவதில்லை அல்லது பயன்பாடு மிகவும் குறைவாக அமைந்துள்ளது. 

இந்தத் தவறை சீர் செய்து, புவிக்கு நட்பான வகையில் அமைந்திருக்கச் செய்வதற்கு நாம் ஒன்றிணைய வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஐந்தாண்டுகளுக்கு நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் சௌகரியத்துடன் 100,000 கூரை மீதான சூரியப் படல் கட்டமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் இலக்கை CDB ஐச் சேர்ந்த நாம் கொண்டுள்ளோம். பொது மின்வழங்கல் கட்டமைப்பிலிருந்து வாடிக்கையாளர் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வாராயின் அவரின் சராசரி மாதக் கட்டணப் பட்டியலை நாம் கணிப்பீடு செய்வோம். எஞ்சிய தொகை முதலீடாக அமைந்திருக்கும். இதனூடாக மேலதிகமாக பிறப்பிக்கப்படும் மின்சாரம் பொதுக் கட்டமைப்புக்கு வழங்கப்படுவதுடன், அந்தத் தொகை வருடாந்தம் இலாபமாக கிடைக்கும். புதுப்பிக்கத்தக்க வலு பயன்பாட்டுக்கு ஆதரவளிக்கும் CDB இன் தந்திரோபாயம் என்பது, இலங்கை அரசாங்கத்தின் நிலைபேறான தேசிய கொள்கையின் பிரகாரம் அமைந்துள்ளது. 

கூரைமீதான சூரியப் படல்கள் நிதி அனுகூலத்தை வழங்குவதன் காரணமாக, சிறந்த முதலீடாக அமைந்துள்ளன. நிலைபேறாண்மை எனும் பாரிய சமூகத் தேவையையும் நிவர்த்தி செய்வதாகவும் அமைந்துள்ளன. எமது CDB அலுவலகங்களில் கனிம எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரப் பாவனையை கட்டுப்படுத்தும் திட்டத்தை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். அடுத்த 2 வருடங்களில் எமது 25% ஆன கிளைகளை சூரிய வலுவுக்கு மாற்றும் பணிகளை ஆரம்பிப்போம். அதன் முக்கிய படிமுறையாக, சகல 71 CDB கிளைகளினதும் கூரைகளை, சூரியப் படல்கள் பொருத்தப்பட்ட கூரைகளாக மாற்றியமைத்து, கிளைகளின் மின்சாரத் தேவைகளை நிவர்த்தி செய்வது அமைந்துள்ளது. சில பகுதிகளில் சரக்கு கையாளல் சம்பந்தமான சவால்கள் காணப்படுகின்றன. அவற்றை சீர் செய்து, எமது செயற்பாடுகளை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம்.

வளங்களைக் கொண்டுள்ள இலங்கையர்கள் முன்வந்து சூரியப் படல் போன்ற புதுப்பிக்கத்தக்க வலு மூலத்தை நிறுவுவது அவர்களின் பொறுப்பாக அமைந்துள்ளது. எமது கட்டடங்களில் காணப்படும் மேலதிக மின்விசிறி அல்லது மின்குமிழ் போன்றன மெதுவாக ஆனாலும் உறுதியாக 1.50C வரை உலக வெப்பமயமாதலுக்கு பங்களிப்பு வழங்கக்கூடியன என்பதால், நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு சிறிய நடவடிக்கைகளும் பாரிய பெறுபேறுகளை ஏற்படுத்துவதுடன், எமது மக்கள், எமது புவி மற்றும் எமது இலாபத்தை பாதுகாப்பதாக அமைந்திருக்கும்.