CDB சிசுதிரி புலமைப்பரிசில் திட்டம் – 14 வது கட்டம்

2020ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் அல்லது க.பொ.த சாதாரண தர பரீட்சையில் திறமையாக சித்திபெற்ற, பொருளாதார ரீதியில் பின்தங்கிய அல்லது CDB ரன்கெடி சிறுவர் சேமிப்பு வைத்திருக்கும் உங்கள் பிள்ளைக்கு இந்த புலமைப்பரிசில் திட்டத்தில் இணைய, மாதிரி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர்- சந்தைப்படுத்தல், சிட்டிசன்ஸ் டிவலோமெண்ட் பிசினஸ் பைனான்ஸ் பி.எல்.சி, இலக்கம் 123, ஓரபிபாஷ மாவத்தை, கொழும்பு 10 என்ற முகவரிக்கு உடனடியாக அனுப்பி வையுங்கள்.

முழுமைப் படுத்தப்பட்ட விண்ணப்பத்துடன் பிள்ளையின் பிறப்புச் சான்றிதழின் பிரதி, அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்ட பரீட்சை பெறுபேறு சான்றிதழ், CDB ரன்கெடி சிறுவர் சேமிப்பு வைத்திருப்பவராயின் கணக்கு பாஸ் புத்தகத்தின் பெயர் குறிப்பிட்டுள்ள பக்கத்தின் பிரதி, பொருளாதார ரீதியில் பின்தங்கிய ஒருவராயின் அது தொடர்பாக மற்றும் உங்கள் மாதாந்த வருமானத்தை உறுதி செய்யும் வகையில் கிராம சேவகரினால் அனுமதிப் படுத்தப்பட்ட சான்றிதழையும் இணைத்து அனுப்பி வைக்கவும்.

பெற்றோரின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாகும்

விண்ணப்பத்தை Download செய்யுங்கள்