பாதுகாப்பான CDB கடனட்டை பாவனைக்கான சிறு குறிப்புகள்

CDB உங்கள் கடனட்டைகளுக்கு பாதுகாப்பு

CDB இல், உங்களையும் உங்கள் அட்டைகளையும் மோசடிகளிலிருந்து பாதுகாப்பதற்கு அவசியமான சகல முயற்சிகளையும் நாம் மேற்கொள்கின்றோம். நீங்கள் மோசடி இனங்காணல் கட்டமைப்பு மற்றும் 24/7 மோசடி கண்காணிப்பு அணியினால் பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள். CDB இன் மோசடி இனங்காணல் கட்டமைப்பினால் உங்களில் கணக்கில் ஏதேனும் அசாதாரண செயற்பாடுகள் இடம்பெறுகின்றனவா என்பது கண்காணிக்கப்பட்டு, மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.

வாடிக்கையாளர் உதவி

உள்நாட்டில் அல்லது வெளிநாடொன்றில், உங்கள் அட்டை காணாமல் போனால் அல்லது திருடப்பட்டால் அல்லது தவறான முறையில் பயன்படுத்தப்படக்கூடிய வாய்ப்புகள் இருந்தால், 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை உதவியை நாம் வழங்குகின்றோம். 011 7 121 121 ஊடாக உடனடியாக எம்முடன் தொடர்பை ஏற்படுத்தினால், (ஸ்டான்டர்ட்/கோல்ட்/டைட்டேனியம்) உங்கள் அட்டையை (களை) எமது ஊழியர்கள் உடனடியாக இரத்துச் செய்து, மாற்று அட்டைகளை உடனடியாக வழங்குவார்கள்.

சிப் தொழில்நுட்பம்

சிப் அட்டைகள் என்பது, மைக்குரோ சிப் உள்வைக்கப்பட்ட கடனட்டைகளாக அமைந்துள்ளன. இந்த அட்டைகள் குறிமுறையாக்கப்பட்டவையாகவும் மற்றும் இரகசியத் தகவல்களை கொண்டதாகவும் அமைந்திருப்பதுடன், காந்தப்புல பட்டி (magnetic stripe) அட்டைகளை விட சிறந்த பாதுகாப்பை வழங்கக்கூடியதாக அமைந்துள்ளன.

சிப் மற்றும் காந்தப்புல பட்டி அட்டைகளை விற்பனை நிலையங்கள் ஏற்றுக் கொள்கின்றன. சிப் அட்டையின் செயன்முறையும், காந்தப்புல பட்டி அட்டையைப் போன்றதாக அமைந்திருக்கும். சிப் அட்டைகளைப் பெறும் விற்பனை நிலையங்கள், அட்டைக் கொடுப்பனவு இயந்திரத்தினுள் சிப் அட்டையை சொருகி குறித்த கட்டணத்தை அறவிடுகின்றன. விற்பனையை உறுதி செய்யும் சீட்டு அச்சிடப்படும் வரை அட்டை சொருகப்பட்ட நிலையில் இருக்கும். இந்த சிப் தொழில்நுட்பத்துக்கு இதுவரையில் தம்மை மாற்றிக் கொள்ளாத விற்பனையகங்கள் தொடர்ந்தும் அட்டைகளை ஸ்வைப் செய்து கட்டணத்தை அறவிடும். இரு சந்தர்ப்பங்களிலும், விற்பனை சிட்டையில் உங்கள் கையொப்பத்தை இடுமாறு கோரப்படுவீர்கள்.

நினைவில் வைத்திருக்க வேண்டிய புள்ளிகள்

  • ஏற்கனவே காணப்படும் அட்டையின் காலாவதி திகதிக்கு ஒரு வார காலப்பகுதிக்கு முன்னதாக உங்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டை உங்களுக்கு கிடைக்காவிடின் எமக்கு அறிவிக்கவும்.
  • புதுப்பிக்கப்பட்ட அல்லது மாற்றீடு செய்து கொண்ட அட்டையை நீங்கள் செயற்படுத்திக் கொண்ட பின்னர், பழைய அட்டையை அழித்துவிடவும் (துண்டுகளாக வெட்டி அழிக்கவும்)
  • உங்களுக்கு அட்டை விநியோகிக்கப்படும் போது CDB Credit Card welcome kit முறையாக சீல் செய்யப்பட்ட நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும், அவ்வாறு காணப்படாவிடின், அது பற்றி எமக்கு உடனடியாக அறிவிக்கவும்.
  • வெளிநாடு செல்ல திட்டமிட்டால் அல்லது உயர் பெறுமதி வாய்ந்த கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட தீர்மானித்தல் அது பற்றி முன்கூட்டியே எமக்கு அறியத்தரவும்
  • உங்களின் கடனட்டை அறிக்கையில் காணப்படும் ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல் பற்றியும் கவனம் செலுத்துவதுடன், சகல கொள்வனவுகளுக்கும் உரிய சரியான தொகை அறவிடப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளவும் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத கொடுக்கல் வாங்கல்கள் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்யவும். ஏதேனும் வித்தியாசங்கள் காணப்பட்டால், உடனடியாக CDB கார்ட் சென்ரருக்கு அது பற்றி அறிவிக்கவும்.
  • இயலுமாயின், விற்பனை பகுதிகளில் உங்கள் அட்டையினூடாக கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்படும் போது உங்கள் அட்டை ஏனையவர்களின் பார்வையில் படாமல் இருக்குமாறு பேணவும்.
  • உங்களின் மாதாந்த கூற்றை நீங்கள் பெறாவிடின், CDB க்கு அறிவிக்கவும்.
  • உங்களின் கடனட்டை அல்லது பற்று அட்டையை வேறெவரும் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம். உங்கள் அனுமதியின்றி, குடும்ப அங்கத்தவர் ஒருவரினால் உங்கள் அட்டை பெற்றுக் கொள்ளப்பட்டால் (வாழ்க்கைத் துணை, பிள்ளை, பெற்றோர்), அட்டைதாரர் எனும் வகையில், அட்டையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கொடுக்கல் வாங்கலுக்கும் நீங்கள் பொறுப்பாளியாக இருப்பீர்கள்.

உங்கள் PIN ஐ பாதுகாத்துக் கொள்வது

உங்கள் PIN உங்களுக்கு பிரத்தியேகமானது. உங்கள் கணக்கில் ஏதேனும் மேலதிக அட்டைதாரர்களை கொண்டிருந்தால், அவர்களுக்கு அவர்களின் சொந்த PIN இலக்கம் வழங்கப்பட்டிருக்கும். கீழே தரப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றி உங்கள் PIN ஐ பாதுகாத்துக் கொள்ளுங்கள்:

  • PIN உங்கள் ஐ நினைவில் வைத்திருக்கவும். உங்களால் இலகுவாக ஞாபகத்தில் வைத்திருக்கக்கூடிய இலக்கத்துக்கு மாற்றிக் கொள்ள வேண்டுமாயின், எமது எந்தவொரு ATM இலும் அல்லது இலங்கையிலுள்ள வணிக ATM களிலும் மேற்கொள்ள முடியும்.
  • ஞாபகத்தில் வைத்திருக்கக்கூடிய இலக்கத்துக்கு PIN ஐ மாற்றும் போது 1234 அல்லது 1111 போன்ற தொடர் இலக்கங்களை தெரிவு செய்வதை தவிர்த்துக் கொள்ளவும்.
  • ATM ஐ பயன்படுத்தும் போது ஏனையவர்கள் உங்களின் PIN இலக்கத்தை பார்வையிடுவதை தவிர்த்துக் கொள்வதற்காக இயலுமானவரை PIN pad க்கு அருகாமையில் நில்லுங்கள்.
  • உங்களின் PIN/ பாதுகாப்பு தகவல்களை எழுதி வைக்க அல்லது ஏனையவர்களுக்கு தெரிவிக்க வேண்டாம்.
  • கொடுக்கல் வாங்கலை மேற்கொள்வதற்காக உங்கள் சார்பாக வேறொருவரை PIN இலக்கத்தை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டாம்.
  • உங்கள் பணப் பையில் உங்கள் அட்டை மற்றும் PIN தபாலை ஒன்றாக பேண வேண்டாம்.
  • உங்களின் PIN இலக்கத்தை தவறவிட்டால் / மறந்துவிட்டால், எமது ஹொட்லைன் இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு இலக்கமொன்றை கோர முடியும்.
  • தொலைபேசி, மின்னஞ்சல் ஊடாக ஓடர் செய்யும் போது அல்லது இணையத்தில் அட்டையை பயன்படுத்தும் போது PIN இலக்கத்தை வெளிப்படுத்த வேண்டாம்.
  • அடிக்கடி உங்கள் அட்டையின் PIN இலக்கத்தை மாற்றிக் கொள்ளவும்.

பாதுகாப்பான ATM பயன்பாட்டுக்கான பொறுப்பு வாய்ந்த சில குறிப்புகள்

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் MasterCard அடையாளமிடப்பட்ட (உங்களின் அட்டை வகையைப் பொறுத்து) எந்தவொரு ATM இலும் உங்களின் அட்டை மற்றும் PIN ஐ பயன்படுத்தி எந்நேரத்திலும் பணத்தை மீளப்பெற முடியும்.

  • உங்கள் கொடுக்கல் வாங்கலை பூர்த்தி செய்ததும், வளாகத்திலிருந்து வெளியேறும் முன்னதாக உங்கள் பணத்தையும் ATM அட்டையையும் துரிதமாக பாதுகாத்துக் கொள்ளவும்.
  • ATM இலிருந்து பெற்றுக் கொண்ட பணத்தை கணக்கிடும் போது அவதானமாக இருக்கவும்.
  • நீங்கள் எதிர்பார்க்கும் போது உங்களின் அட்டையை ATM திரும்ப வழங்கவிடின், இலக்கத்தை மீள பிரசுரிக்க முயற்சிக்க வேண்டாம். உடனடியாக CDB க்கு அறிவிக்கவும்.
  • முன்னறிமுகம் இல்லாதவர்களின் உதவியை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்பதுடன், கவனத்தை திசை திருப்ப முனையும் நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டாம்.
  • ATM ஐ பயன்படுத்தும் போது அவதானமாக இருக்கவும். ATM திசேதமடைந்திருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், மற்றுமொரு ATM திஐ பயன்படுத்துவதுடன், அது பற்றி CDB க்கு அறிவிக்கவும். 
  • கொடுக்கல் வாங்கல் பற்றுச்சீட்டை துண்டுகளாக கிழித்து குப்பையில் இடவும்.

Update Contact information

We make every effort to protect you against fraud and may need to contact you quickly if we identify any suspicious activity on your cards. The best and quickest way for us to contact you is via a call to your mobile number updated in our Systems. Therefore, if you change your contact information be mindful to inform us regarding the changes by calling our hotline.

வெளிநாட்டில் இருக்கும் போது உங்கள் அட்டையை பாதுகாத்துக் கொள்வது

நாட்டிலிருந்து வெளியேறும் முன்னர்

  • ஒன்றுக்கு மேற்பட்ட கொடுப்பனவு முறையை கொண்டு செல்வதில் கவனம் செலுத்தவும். உதாரணம்: CDB பற்று அட்டை, CDB கடனட்டை
  • மோசடிகளிலிருந்து உங்களை பாதுகாக்கும் வகையில் உங்களின் அட்டைகளில் அசாதாரண கொடுக்கல் வாங்கல்களை நாம் கண்காணிக்கின்றோம். எனவே, வெளிநாடும் செல்லும் முன்னர் எமக்கு அறிவிக்கவும். இதனூடாக உங்கள் கொடுக்கல் வாங்கல்கள் நிராகரிக்கப்படுவதை பெருமளவில் தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். எவ்வாறாயினும், இதற்கு உத்தரவாதமில்லை.
  • நாட்டிலிருந்து வெளியேறும் முன்னதாக CDB இன் தொடர்பு கொள்ளக்கூடிய தகவல்களை குறித்து வைத்துக் கொள்ளவும், எனவே உங்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படும் போது எம்முடன் தொடர்பு கொள்ளக்கூடியதாக இருக்கும்.

 

வெளிநாட்டில் இருக்கும் போது

  • எங்கும் உங்கள் அட்டையை கவனயீனமாக விட்டுச் செல்ல வேண்டாம். பணத்தைப் போல பாதுகாக்கவும்.
  • நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் போது உங்கள் அட்டை களவாடப்பட்டால் அல்லது காணாமல் போனால் உடனடியாக எம்முடன் 011 7 121 121 (பிளாட்டினம்/வேர்ள்ட்), 011 7 121 122 (ஸ்டான்டர்ட்/கோல்ட்/டைட்டேனியம்) உடன் தொடர்பு கொள்ளவும்.
  • ATM ஐ பயன்படுத்தும் போது அவதானமாக இருக்கவும் உங்கள் PIN ஐ பாதுகாத்துக் கொள்ளவும்
  • விற்பனைப் பகுதியில் உங்கள் அட்டை ஸ்வைப் செய்யப்படும் போது உங்கள் பிரசன்னத்தில் இடம்பெறுவதை உறுதி செய்யவும்.
  • மோசடிகளை தவிர்க்கும் வகையில் உங்கள் கணக்கில் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுவதை நாம் கண்காணிப்பதுடன், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்களில் பாதுகாப்பு பரிசோதனைகளை மேற்கொள்வோம். இதனால் உங்களுக்கு ஏற்படக்கூடிய ஏதேனும் அசௌகரியங்களுக்கு வருந்துகின்றோம்.
  • இலங்கைக்கு மீளத்திரும்பியதும், உங்களின் அட்டைக்கூற்றில் காணப்படும் பதிவுகளை கவனமாக சரிபார்க்கவும். ஏதேனும் எதிர்பாராத அல்லது தவறுதலான கொடுக்கல் வாங்கல்கள் காணப்பட்டால் ஹொட்லைன் ஊடாக உடனடியாக எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.

ஒன்லைன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போது அட்டையை பாதுகாத்துக் கொள்ளவும்

  • உங்களின் ஒன்லைன் கொடுப்பனவுகளை பாதுகாப்பாக மேற்கொள்ளும் வகையில் Verified by Visa அல்லது MasterCard Secure Code என்பதற்கு பதிவு செய்து கொள்ளவும்.
  • உங்கள் அட்டையின் பின்புறத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் மூன்று இலக்க இலக்கத்தை உறுதி செய்யுமாறு அடிக்கடி உங்களிடம் கோரப்படலாம். இந்த இலக்கம் உங்களின் அட்டைக்கு பிரத்தியேகமானது என்பதுடன் மேலதிக பாதுகாப்பு உள்ளம்சமாகும்.
  • உங்களின் முழுமையான அட்டை இலக்கம், காலாவதி திகதி மற்றும் CVV பெறுமதி போன்றவற்றை எவருக்கும் வெளிப்படுத்த வேண்டாம்.
  • இணையத்தள முகவரியை பதிவு செய்யும் பகுதியில் டைப் செய்து பிரத்தியேக இணைய வங்கிச் சேவை அல்லது சொப்பிங் இணையப் பக்கங்களை மாத்திரம் அணுகவும். மின்னஞ்சல் ஊடாக வழங்கப்படும் லிங்கை ஒரு போதும் பயன்படுத்த வேண்டாம்.
  • உங்களின் ஒப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் அன்டி வைரஸ் மென்பொருள் ஆகியவற்றை அடிக்கடி மெருகேற்றி அப்டேட் செய்து கொள்ளவும்.
  • பிரத்தியேக அல்லது நிதித் தகவல்களைக் கோரும் பரீட்சியமில்லாத மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டாம். கிடைக்கப்பெற்ற மின்னஞ்சல் தொடர்பில் உங்களுக்கு சந்தேகம் ஏதுமிருந்தால் CDB க்கு cards.customercare@cdb.lk எனும் மின்னஞ்சல் வாயிலாக அறிவிக்கவும்.