விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு CDB உதவி

கொழும்பு, செப்டம்பர் 10, 2021- இலங்கையில் நிலைபேறாண்மையில் சிறந்த பத்து கூட்டாண்மை நிறுவனங்களில் ஒன்றாக கௌரவிக்கப்பட்டுள்ள சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB), நாட்டின் விவசாயத்துறையை மேம்படுத்தி உதவுவதற்கு முன்வந்துள்ளது. விவசாயத்துறையின் வளர்ச்சிக்கும் நிலைபேறாண்மைக்கும் உதவும் வகையில் பிரத்தியேகமாக தயாரித்த நிதி வசதிகளுடன் இத்துறையை மேம்படுத்துவதற்கான அரசாங்க கொள்கைகளை ஆதரிப்பதில் CDB முன்னிலையில் திகழும்.
தனது வியாபார தந்திரோபாயத்துடன் ஒன்றிணைக்கப்பட்ட மும்முனை வழிமுறையுடன் (People, Planet and Profit), தேசத்தின் நலன் தொடர்பில் முன்னணி கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில் சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பில் CDB நன்கு உணர்ந்துள்ளது. விவசாயிகளின் தினசரி செயற்பாடுகளில் அவர்களின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு விவசாய சாதனங்களினூடாக அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு வலுச் சேர்ப்பது என்பது CDB இன் பிரதான நோக்காக அமைந்துள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பில் CDB இன் விற்பனைகள் மற்றும் அபிவிருத்தி பணிப்பாளர் சசிந்திர முனசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “எமது நாட்டின் பிரதான வளங்களில் ஒன்றாக அரிசி உற்பத்தி அமைந்துள்ளது. எனவே, உற்பத்தியை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது மற்றும் விவசாயிகளை பராமரிப்பது என்பது எமது பிரதான கடமையாகும். எனவே, சகல விவசாயிகளினதும் எதிர்பார்ப்புகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்த வசதிகளை CDB ஆரம்பித்திருந்ததுடன், அவர்களுக்கு சிறந்த வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ளது.” என்றார்.

விவசாயத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு விசேட கொடுப்பனவு திட்டங்களை CDB கொண்டுள்ளது. பருவ கால அடிப்படையிலான கொடுப்பனவு முறைகள் வெவ்வேறு விளைச்சல் பருவங்களுக்கமைய வேறுபடும். நெகிழ்ச்சியான மீளக் கொடுப்பனவு காலப்பகுதியுடன் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் வழங்கப்படுகின்றது. இந்த வசதிகள் அவர்களின் சௌகரியத்துக்கமைய கையாளப்படும் என்பதுடன், குறைந்தளவு ஆவணங்கள் மற்றும் வீட்டு வாயிலுக்கு விஜயம் செய்யும் சேவைகளையும் கொண்டுள்ளன.

“இலங்கையின் விவசாயிகளுக்கு எமது பிரத்தியேகமான வசதிகளை வழங்க முடிந்துள்ளமை உண்மையில் மகிழ்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. நாட்டின் அபிவிருத்தியில் விவசாயிகள் முக்கிய பங்காற்றுகின்றனர். அவர்களின் பணிகளுக்கு அரிதளவில் ஆதரவளிக்கப்படுகின்றன. மொத்த தேசிய உற்பத்தியில் விவசாயத் துறை தற்போது 7.4% பங்களிப்பை வழங்குகின்றது. புதிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவதனூடாக இதை மேலும் மேம்படுத்துவதற்கு வாய்ப்புகள் காணப்படுவதை உணர்த்துகின்றது. இந்தத் துறையை மேம்படுத்துவதனூடாக, நாட்டின் பொருளாதாரத்தை நிலைபேறான வகையில் பேணுவதற்கு உதவியாக இருக்கும் என்பதுடன், நாட்டின் சிறந்த சொத்தான விவசாயிகளுக்கு CDB எப்போதும் ஆதரவளிப்பதாக இருக்கும்.” சசிந்திர முனசிங்க மேலும் குறிப்பிட்டார்.

பொதுப்பட்டியலிடப்பட்ட கூட்டாண்மை முன்னோடி நிறுவனமாக சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) திகழ்வதுடன், இலங்கையில் இயங்கும் சிறந்த வங்கிசாரா நிதிச்சேவைகளை வழங்கும் ஐந்து மாபெரும் நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. நாடளாவிய ரீதியில் பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்படும் முறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும், நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு இயங்குகின்றது.