இஸ்லாமிய நிதிச் சேவைகள் (Islamic Finance)

இஸ்லாமிய ஷரிஆ கொள்கைக்கு அமைவாக CDB மீசான் எனும் கணக்கு CDB யினால் வழங்கப்படுகிறது.

CDB மீசான் கணக்கில் அடங்கியுள்ளவை:

  • இஜாரா (குத்தகை)
  • முதரிபா (வைப்புகள்)
  • முருபஹா (வாகனம் நிதி)

இஜாரா (Ijarah)

இஸ்லாமிய கொள்கைகளுக்கு அமைவாக விசேடமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இஜாரா குத்தகை சேவையினூடாக வாடிக்கையாளர்கள் புத்தம் புதிய அல்லது பதிவு செய்யப்பட்ட வாகனங்களை கொள்வனவு செய்ய முடியும். இதற்கமைவாக, உங்கள் தெரிவுக்கு அமைய காணப்படும் வாகனத்தை CDB கொள்வனவு செய்து, உங்களுக்கு பாவனைக்கு வழங்கும். குறித்த குத்தகை கொடுப்பனவு பூர்த்தி செய்யப்பட்டதும், வாகனத்தை முழுமையாக உங்களுக்கு ஒப்படைக்கும். நீங்கள் செய்ய வேண்டியது, தவணைக் கட்டணத்தை குறித்த காலத்தில் செலுத்துவதாகும். சகல பாரிய பழுதுபார்ப்புகளுக்கான செலவீனங்கள் மற்றும் காப்புறுதி ஆகியவற்றுக்கான செலவீனங்களை CDB பொறுப்பேற்கும். இதன் மூலம் உங்களுக்கு காணப்படக்கூடிய பெருமளவான இடரை நாம் பொறுப்பேற்று, இஜாரைவை முழுமையாக அனுபவிப்பதற்கான சுதந்திரத்தை வழங்குகிறோம்.

இஜாராவில் காணப்படும் அனுகூலங்கள் என்ன?

  • கவர்ச்சிகரமான தவணைக் கட்டணங்கள்
  • ஷரிஆ விதிமுறைகளுக்கு அமைவான பரிபூரண காப்புறுதித் திட்டம்
  • ஆகக்கூடிய குத்தகை காலம் (72 மாதங்கள்)

 

Download the application for a new account

முதரபா (Mudharabah)

முதரபா அல்லது முதலீடு என்பது ஒருவிதமான உடன்படிக்கையாகும். ஒரு தரப்பு மூலதனத்தின் 100% தொகையை வழங்குவதுடன், மற்றைய தரப்பு தனது விசேட அறிவையும் நிபுணத்துவத்தையும் வழங்குவதன் மூலம் முதலீட்டு திட்டத்தை முறையாக கையாளும் வகையில் இந்த உடன்படிக்கை அமைந்திருக்கும். திரட்டப்படும் இலாபம் என்பது, முதலீடுகளை மேற்கொள்ளும் தரப்பினரிடையே ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய பகிரப்படும். நஷ்டங்கள் முழுமையான நிதி வழங்குநரின் மூலம் ஏற்கப்படும் (முறையற்ற கையாளல், கவனயீனம் அல்லது நிதி முகாமையாளரின் பொறுப்பற்ற செயற்பாடு என்பன உறுதி செய்யப்பட்டால் தவிர)

முதரபாவில் காணப்படும் அனுகூலங்கள் என்ன?

  • நீங்கள் ஆகக்குறைந்த வைப்பாக 10000 ரூபாவை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்
  • உங்கள் வைப்புகளுக்கு காலாண்டு அடிப்படையில் வருமதிகள்
  • வைப்புகள் 3 மாதங்கள், 6 மாதங்கள் மற்றும் 12 மாதங்கள் வரையிலான காலப்பகுதிக்கு உங்கள் வசதிக்கேற்ப மேற்கொள்ள முடியும்
  • கவர்ச்சிகரமான இலாப பகிர்வு விகிதம்

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டது