CDB அட்வான்ஸ் ரூஃவ் சோலர்

மதிநுட்பமான மற்றும் நிலைபேறான எதிர்காலத்தில் முதலிடுங்கள்

நோக்கம்

காலநிலை இடர் மற்றும் கொவிட்-19 இன் சமூக-பொருளாதார தாக்கங்களை சமாளிப்பதற்கு மீட்சித் திட்டமிடல் மற்றும் கொள்கைத் திட்டமிடல் போன்றவற்றுக்கான பரிபூரண வழிமுறை அவசியமாகவுள்ளது. நாடுகளால் டிஜிட்டல் புத்தாக்கமான மற்றும் சூழலுக்கு நட்பான கொள்கைகளை பின்பற்றுவதனூடாக, பொருளாதார மீட்சிக்கு வழியேற்படுத்த முடியும் என்பதுடன், புதிய மற்றும் சூழலுக்கு நட்பான உணர்திறன் மிக்க வியாபார மாதிரிகளினூடாக நிலைபேறான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும். சூழலுக்கு நட்பான மீட்சியினூடாக சூழலுக்கு நட்பான பொருளாதாரத்தை எய்தக்கூடியதாக இருக்கும் என்பதுடன், சூழலுக்கு நட்பான தடத்தைக் கொண்டிருப்பது அத்தியாவசியமானதாகும். CDB ஐச் சேர்ந்த நாம் பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனமாக இயங்குவதுடன், நிலைபேறாண்மை எனும் கொள்கையை நிறைவேற்றுகின்றோம்.

தந்திரோபாய வியாபார அலகு எனும் வகையில் “CDB அட்வான்ஸ்” இனால் நிலைபேறான தயாரிப்பு பிரிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதுடன், நான்கு பிரதான பிரிவுகளில் ஈடுபாட்டைக் கொண்டுள்ளது. இந்த அலகின் முதல் கட்டத்தை இது மேலும் விவரிப்பதாக அமைந்திருப்பதுடன், கூரை மீதான சூரிய வலு பிறப்பிப்பு தயாரிப்பினூடாக நிலைபேறான வலு நுகர்வில் கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது – “CDB அட்வான்ஸ் – ரூஃவ் சோலர்”.

CDB அட்வான்ஸ் – ரூஃவ் சோலர் பற்றி

மதிநுட்பமான, சுய-நிலைபேறான வாழ்க்கை முறையைக் கொண்ட CDB அட்வான்ஸ் – ரூஃவ் சோலருடன், எதிர்காலத்தில் பிரவேசியுங்கள். மின்கட்டணப் பட்டியல்கள் இல்லை என்ற போதிலும், நீண்ட கால வருமானங்களை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியும் காணப்படுகின்றன! CDB அட்வான்ஸ் – ரூஃவ் சோலருடன், நவீன சூரிய தொழில்நுட்பத்துடன், பரிபூரண தீர்வைக் கொண்டுள்ளதுடன், இலங்கை நிலைபேறாண்மை வலு அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட வழங்குநர்களின் விற்பனைக்கு பின்னரான பராமரிப்பு வழங்கப்படுகின்றது. CDB இனால் வழங்கப்படும் சௌகரியமான நிதியளிப்பு வசதியாக அமைந்திருப்பதுடன், உங்கள் வருமானத்தை கண்காணிப்பதற்கு விசேட கட்டமைப்பாகவும் உள்ளது. 

– தற்போது, தொழில்நுட்ப பங்காளராக ஹேலீஸ் சோலருடன் நாம் கைகோர்த்து இயங்குகின்றோம்.

உள்ளம்சங்கள்:

 • விசேட வட்டி வீதங்கள்
 • 7 வருடங்கள் வரை நெகிழ்ச்சியான மீளச் செலுத்தும் காலம்
 • புகழ்பெற்ற CEA பதிவு செய்யப்பட்ட கூரை மீதான சூரிய வலுத் தீர்வு வழங்குநராக (ஹேலீஸ் சோலர்) பங்காளராக இணைந்துள்ளது
 • பூஜ்ஜிய மின் கட்டணப் பட்டியல் அல்லது முதலீட்டுத் திட்டம்

அனுகூலங்கள்

 • கட்டணப்பட்டியல்கள் இல்லை
 • உங்கள் வாயிலில் பிரத்தியேகமான சேவை
 • இலவச ஆலோசனை மற்றும் ஆய்வு அறிக்கை
 • சௌகரியமான பொருத்துகை
 • இலகுவான செயன்முறைகள் மற்றும் குறைந்த ஆவணப்படுத்தல்
 • பிணைகள் அவசியமில்லை அல்லது சொத்து உறுதி அடைமான அவசியமில்லை
 • மின் இணைப்பை பெற்றுக் கொள்வதற்கான சிக்கல்களில்லாத செயன்முறை (CEB/LECO உடன் செயலாற்ற வேண்டியதில்லை)
 • வசதியளிப்பு காலப்பகுதியில் சோலர் கட்டமைப்புக்கான காப்புறுதி

தேவைப்படும் ஆவணங்கள்

 • தேசிய அடையாள அட்டை/சாரதி அனுமதிப் பத்திரம்/கடவுச் சீட்டு பிரதி
 • கடந்த மூன்று மாதங்களுக்கான மின்சார கட்டணப் பட்டியல்களின் பிரதி
 • வருமானத்துக்கான ஆதாரம்

-பணியாற்றும் ஊழியர்கள் – 2 சம்பளசிட்டைகள் + தொழில் வழங்குநரிடமிருந்து சம்பள உறுதிப்படுத்தல் படிவம்

– வியாபார வாடிக்கையாளர்கள் – வியாபார பதிவு பிரதி + கடந்த 6 மாதங்களுக்கான வங்கிக் கூற்றுகள்

*நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்படும்

தொழில்நுட்ப பங்காளர் பற்றி

ஹேலீஸ் சோலர் என வர்த்தக நாமமிடப்பட்ட, ஃபென்டன்ஸ் லிமிடெட், ஹேலீஸ் பிஎல்சியின் முழு உரிமையாண்மையின் கீழ் இயங்கும் துணை நிறுவனமாகும். அதிகளவு திறன் படைத்த மற்றும் இலங்கையின் நம்பிக்கையை வென்ற பொறியியல் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வதுடன், ஊழியர்களிடமிருந்து கிடைக்கும் ஒப்பற்ற ஆதரவினூடாக, இலங்கையில் 35 MW க்கு அதிகமான திறனைக் கொண்ட புதுப்பிக்கத்தக்க வலு பிறப்பிப்பாளர் எனும் இன்றைய நிலைக்கு ஹேலீஸ் சோலர் உயர்ந்துள்ளது. சகல பொருத்துகைகளினதும் வடிவமைப்பு, பொருத்துகை, செயற்படுத்தல் மற்றும் பராமரிப்பு போன்றன 15 தகைமை வாய்ந்த BCS பொறியியலாளர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.

சூரிய பல சங்கிராமய திட்டத்தின் முன்னோடியாக ஹேலீஸ் சோலர் அமைந்துள்ளது. சர்வதேச ரீதியில் முதல் நிலை சூரியபடல் உற்பத்தியாளருடன் கைகோர்த்து PV பெனல்கள் உற்பத்தி மற்றும் சிறந்த இன்வேர்ட்டர் உற்பத்தியாளர்களுடன் இணைந்து உயர் தரம் வாய்ந்த சோலர் PV கட்டமைப்புகளை வழங்குகின்றது.  இவற்றின் பெருமைக்குரிய வாடிக்கையாளர்களில் MAS ஹோல்டிங்ஸ், பிரான்டிக்ஸ் அப்பரல்ஸ், கொகா கோலா, சிபிஎல் ஃபுட்ஸ் போன்றன அடங்கியுள்ளதுடன், அண்மையில் ஹேலீஸ் குழுமத்தினுள் 5 MW க்கும் அதிகமான வலுக்கட்டமைப்பை நிறுவியிருந்தது.

 • ஹேலீஸ் நிபுணத்துவத்துடன் சிறந்த தயாரிப்பு
 • சர்வதேச ரீதியில் முதல் தர சோலர் உற்பத்தியாளர்களுடன் கைகோர்ப்பு
 • சிறந்த விற்பனைக்கு பிந்திய சேவை

தயாரிப்பு உத்தரவாதம்

 • சோலர் PV பெனல்களுக்கு 12 வருட உற்பத்தியாளர் உத்தரவாதம்
 • சோலர் PV பெனல்களுக்கு 25 வருட வினைத்திறன் உத்தரவாதம்
 • இன்வேர்ட்டர் மீது 10 வருட உற்பத்தியாளர் உத்தரவாதம்

CDB அட்வான்ஸ் ரூஃவ் சோலருடன் மதிநுட்பமான நிலைபேறான வாழ்க்கை முறைக்கு மாறுங்கள்

மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள்:

லஹிரு – தலைமை அதிகாரி – ரூஃவ் சோலர் நிதியளிப்பு – 0772 68 39 39

பிரசன்ன – ஒருங்கிணைப்பாளர் – ரூஃவ் சோலர் நிதியளிப்பு – 0774 41 22 34

விசாரித்து






*கட்டாயமாகும்