CDB இன் தொழில்நுட்ப அம்சங்கள் செயற்படுத்தப்பட்ட குருநாகல் கிளை ஊடாக சேவைத் தரங்கள் மேம்படுத்தத் திட்டம்

சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) தனது 25 வருட பூர்த்தி கொண்டாட்டங்களுக்கமைய, குருநாகலில் நவீன வசதிகள் படைத்த கிளையை நிறுவும் வகையில் அடிக்கல் நாட்டி, தனது சேவைச் சிறப்பின் அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது. குருநாகல் நகரின் மையத்தில் நிறுவப்படும் இந்தக் கிளை, CDB இன் நிலைபேறாண்மை அம்சங்களைக் கொண்ட வியாபார தந்திரோபாயத்தை பிரதிபலிக்கும் வகையில் டிஜிட்டல் அம்சங்களைக் கொண்டதாக அமைந்திருக்கும்.

நவீன அம்சங்களுடன் தொழில்நுட்பமயமாகப்படும் குருநாகல் கிளையின் நிர்மாணப் பணிகள் 18 மாதங்களில் பூர்த்தி செய்யப்பட்டதும், சேவைத் தரங்களை மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் என்பதுடன், தனிப்பயனாக்கப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை பகுதி உட்பட விசேட டிஜிட்டல் செயல்பாடுகளையும் கொண்டிருக்கும். நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறும் முறையை மாற்றியமைக்கும் வகையில் இந்தக் கிளை அமைந்திருக்கும் என்பதுடன், CDB இன் பரந்த தீர்வுகள் மற்றும் சேவைகளை உள்ளடக்கியிருக்கும். கிளையில் காணப்படும் மற்றுமொரு விசேட உள்ளம்சமாக, நவீன வசதிகளைக் கொண்ட பயிற்சி மற்றும் விருத்தி வசதிகளைக் குறிப்பிட முடியும். CDB இன் பயிற்சித் திட்டங்களுக்கமைய, சிறந்த ஆளுமைகளைக் கொண்ட செயலணியை கட்டியெழுப்புவதற்காக, இதை பிராந்திய கிளைகள் பயன்படுத்தும்.

இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் CDB இன் தவிசாளர், முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி, பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், முகாமையாளர்கள் மற்றும் குருநாகல் கிளை அணி அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


படம் – குருநாகலில் நிர்மாணிக்கப்படும் CDB கிளையின் கட்டடக் கலை வரைபட விளக்கம்.