CodeGen உடன் கைகோர்த்து இலங்கையில் நிலைபேறாண்மையை துரிதப்படுத்தும் CDB

பசுமையான பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் பிரகாரம், Citizens Development Business Finance PLC (CDB), e Shift Concept Center ஐ அறிமுகம் செய்துள்ளது. CDB இன் நிலைபேறாண்மை நிகழ்ச்சிநிரலின் பிரகாரம், நிறுவனத்தின் நிலைபேறான போக்குவரத்து தீர்வுகளில் கவனம் செலுத்தும் வகையில் இந்த நிலையம் அமைந்துள்ளது. CodeGen International (Pvt) Ltd உடன் CDB ஏற்படுத்திக் கொண்ட கைகோர்ப்பு உடன்படிக்கையின் பிரகாரம் இந்தத் தீர்வை வழங்க முன்வந்துள்ளது. இந்த உடன்படிக்கையில் CDB இன் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மஹேஷ் நானயக்கார மற்றும் CodeGen இன் தவிசாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி. ஹர்ஷ சுபசிங்க ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

நிலைபேறாண்மை நிகழ்ச்சி நிரலின் பிரகாரம், சர்வதேச மற்றும் உள்நாட்டு பங்காளர்களுடன் CDB இணைந்து, இலங்கையில் EVs மற்றும் சூரிய வலுத் தீர்வுகளை ஊக்குவிப்பதற்காக ஹரித கைகோர்ப்பை ஆரம்பித்துள்ளது. இந்த கைகோர்ப்பினூடாக ஏற்படுத்தப்பட்ட முக்கிய படிமுறையாக e Shift Concept Center நிலையம் அமைந்திருப்பதுடன், CodeGen International இன் துணைப் பிரிவான chargeNET உடன் இணைந்து முன்னெடுக்கப்படுகின்றது. இதனூடாக, நிலையத்தில் காணப்படும் Charge செய்யும் பகுதிகளுக்கு வலுவூட்டப்படுகின்றன. இந்த கைகோர்ப்பினூடாக, EVs களுக்கு பரிபூரண சூழல்கட்டமைப்பு ஊக்குவிக்கும் வகையில் CDB இன் நிலைபேறாண்மையான போக்குவரத்து தீர்வுகள் துரிதப்படுத்தப்படுவதுடன், அறிவு பகிர்வு, EV சார்ஜ் செய்தல் மற்றும் EV மாற்றம் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகின்றன.

கொழும்பு 7, Greenpath பகுதியில் அமைந்துள்ள e Shift Concept Center இனால், நிலைபேறான போக்குவரத்து தீர்வுகளில் ஆர்வமுள்ள நபர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பொது மக்கள் மத்தியில் EVs மீது ஆர்வத்தை தூண்டுவது போன்றன மேற்கொள்ளப்படும். எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை EVs களுக்கு மாற்றிக் கொள்வது தொடர்பான தகவல்கள் நிறைந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். பாரம்பரியமான நிலக்கரி எரிபொருட்களில் தங்கியுள்ள இலங்கையின் போக்குவரத்துத் துறையில் நிலைபேறான மாற்றத்தை ஏற்படுத்துவதில் இந்த நிலையம் முக்கிய பங்காற்றும். இந்த மாற்றத்துக்கு வழிகோலும் வகையில், நிலையத்தினால் நவீன Charge செய்யும் வசதி EVs களுக்கு வழங்கப்படுவதுடன், மின்சார வாகன Charge செய்யும் வசதியை சௌகரியமாக ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் அணுகலை மேம்படுத்தல் போன்றவற்றினூடாக இலங்கையில் வளர்ச்சி மற்றும் EV சூழல் கட்டமைப்புக்கு பங்களிப்பு வழங்கல் போன்றன எதிர்பார்க்கப்படுகின்றன. இலங்கையில் 1 மில்லியனுக்கு அதிகமான முச்சக்கர வண்டிகள் இயங்கும் நிலையில், அனைத்தும் நிலக்கரி எரிபொருளை பயன்படுத்துகின்றன. CDB மற்றும் CodeGen இணைந்து இந்த முச்சக்கர வண்டிகளை EVs களாக மாற்றும் பணிகளை முன்னெடுக்கும்.

சூரிய வலுவினால் இயங்கும் இந்த நிலையம், இரு நிலைமாற்ற பகுதிகளை கொண்டுள்ளதுடன், ஏழு சார்ஜ் செய்யும் பகுதிகளையும் கொண்டுள்ளன. இவற்றில் இரு பகுதிகள் முச்சக்கர வண்டிகளுக்காக ஒதுக்கப்பட்ட வேகமாக Charge செய்யும் பகுதிகளாகும்.  இலங்கையில் இந்த வசதி வழங்கப்படும் முதலாவது நிலையமாக இது அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் மேலதிக EVs களுக்கு வாகன தரிப்பிட வசதிகளும் காணப்படுகின்றது.

இந்த கைகோர்ப்பு தொடர்பில் மஹேஷ் நானயக்கார தெரிவிக்கையில், “பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில், நிலைபேறான போக்குவரத்து தீர்வுகளை துரித கதியில் ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் எம்மை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக EVs மற்றும் EV உட்கட்டமைப்பு ஆகியவற்றையும், அறிவு பகிர்வையும் ஏற்படுத்த தீர்மானித்துள்ளோம். எமது வீதிகளில் ஒரு மில்லியனுக்கு அதிகமான முச்சக்கர வண்டிகள் காணப்படும் நிலையில், Carbon வெளியீடு, எண்ணெய் கசிவு, ஒலி மாசு போன்ற சுகாதாரத்துக்கு தீங்கான அம்சங்கள், காலநிலை மாற்றத்திலும் பாரிய தாக்கத்தை தோற்றுவிக்கின்றன. இந்தத் திட்டத்தினால் ஏற்படுத்தக்கூடிய நீடித்திருக்கும் நேர்த்தியான தாக்கம் என்பது கற்பனை செய்து செய்து பார்க்க முடியாததாகும்.” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “மாற்றங்களுக்கான செலவு, செலுத்தப்பட வேண்டிய வரிகள், செலவு மற்றும் வாடிக்கையாளரை விரும்பச் செய்வது போன்றன நீண்ட நிரலாக அமைந்துள்ளன. ஆனாலும் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு நாம் எம்மை உறுதியாக அர்ப்பணித்துள்ளதுடன், உலகளாவிய ரீதியில் காணப்படும் ஒரே சிந்தனை கொண்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் எம்முடன் இணைந்து, பசுமையான பொருளாதாரத்தை ஏற்படுத்த முன்வந்துள்ளன. புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் என்பது சர்வதேச பிரச்சனை மாத்திரமல்ல, ஆனாலும் சர்வதேச அவசர நிலையாக அமைந்திருப்பதுடன், இதற்கு அவசரமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது.” என்றார்.

CDB மற்றும் CodeGen International ஆகியவற்றுக்கிடையிலான பங்காண்மை தொடர்பில் கலாநிதி. ஹர்ஷ சுபசிங்க கருத்துத்தெரிவிக்கையில், “நாம் ஒன்றிணைந்து இலங்கையில் EVs ஊடாக நிலைபேறான இலங்கையை ஏற்படுத்த வலுச்சேர்க்கின்றோம். அத்துடன், முச்சக்கர வண்டித் துறையிலும் புரட்சியை ஏற்படுத்துகின்றோம். EVs, மாற்றங்கள் மற்றும் சார்ஜ் செய்யும் தீர்வுகள் தொடர்பான அறிவுப்பகிர்வினூடாக, நாம் எதிர்காலத்துக்கு வலுவூட்டுவதுடன், ஒரு நேரத்தில் ஒரு வாகனத்தில் கவனம் செலுத்துகின்றோம். ஒன்றிணைந்து, நாம் புத்தாக்கவியலாளர்களாக மாத்திரமன்றி, பசுமையான மற்றும் சூழலுக்கு நட்பான இலங்கைய ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றோம்.” என்றார்.