06 ஆவது சர்வதேச CIPM Research Symposium 2022 இல் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சியின் நேர்வு பற்றிய ஆய்வு வெளியீடு

ஆறாவது சர்வதேச CIPM Research Symposium 2022 நிகழ்வில் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சியினால் (CDB) கொவிட் 19 தொற்றுப் பரவல் நிலவிய காலப்பகுதியில் பின்பற்றப்பட்டிருந்த சிறந்த செயன்முறைகள் பற்றிய நேர்வு பற்றிய ஆய்வு வெளியிடப்பட்டிருந்தது. ‘Glocalization of HRM Practices for Business Resilience’ எனும் தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆய்வுக் கருத்தரங்கில், உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் காணப்படும் தனியார், அரச மற்றும் அரச சார்பற்ற துறைசார் நிறுவனங்களின் மனித வளங்கள் முகாமைத்துவ செயற்பாடுகளின் வினைத்திறன் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தன.

“Resilience amid challenges” எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட CDB இன் நேர்வு பற்றிய ஆய்வு, இடருக்கு வெற்றிகரமான முகங்கொடுத்திருந்தமை பற்றிய அம்சங்களைக் கொண்டிருந்தது. இந்த ஆய்வில், CDB இனால் முன்னெடுக்கப்பட்டிருந்த தீர்மானமெடுத்தல்கள் திறனினூடாக, நிறுவனத்தின் ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தார் மற்றும் CDB வாடிக்கையாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்றன உறுதி செய்யப்பட்டிருந்தன. மேலும், வியாபார செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதை உறுதி செய்வதற்கான பங்குதாரர்களின் அர்ப்பணிப்பை கௌரவிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டிருந்தன. மேலும், மீட்சிகரமான எதிர்காலத்துக்கு சூழலின் மீட்சி, மற்றும் நிலைபேறான செயற்பாடுகளை முன்னெடுப்பது மற்றும் உள்ளடக்கமான சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்கள் போன்றவற்றை CDB எவ்வாறு புரிந்து கொண்டிருந்தது என்பதை விளக்குவதாக இந்த ஆய்வு அமைந்திருந்தது. நிலைபேறான வளர்ச்சிக்கான CDB இன் அர்ப்பணிப்பு மற்றும் நீண்ட கால அடிப்படையிலான நிலைபேறான பெறுமதி உருவாக்கம் போன்றவற்றினூடாக சூழலுக்கு நட்பான பொருளாதாரத்தை உருவாக்குவதை உறுதி செய்வதாக இந்த நேர்வு பற்றிய ஆய்வு அமைந்திருந்தது.

ஆவது CIPM Research Symposium 2022 நிகழ்வில், சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சியின் மனித வளங்கள் பிரிவின் பிரதி முகாமையாளர் சத்துரி வெத்தசிங்க உரையாற்றுகின்றார்.

cdb-news-2

ஆவது CIPM Research Symposium 2022 நிகழ்வில், சர்வதேச இலங்கை பிரத்தியேக முகாமைத்துவ பட்டயக் கல்வியகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் வியாபார செயற்பாடுகளுக்கான பணிப்பாளருமான யு.ஏ.சி.ஒபேசேகர, கேடயத்தை சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சியின் மனித வளங்கள் பிரிவின் பிரதி முகாமையாளர் சத்துரி வெத்தசிங்கவிடம் கையளிப்பதையும், அருகில் பேராசிரியர் பிரசாதினி கமகே காணப்படுகின்றார்.

cdb-news