வங்கிசாரா மற்றும் நிதிச் சேவைகள் துறையில் தொடர்ச்சியான 5ஆவது தடவையாக தேசிய வியாபார சிறப்புகள் விருதை CDB வெற்றியீட்டியுள்ளது

தமது பிரத்தியேகமான நிலைபேறான வியாபார மாதிரியினூடாக வியாபாரச் சிறப்பை எப்போதும் சிறப்பாக எய்தியுள்ள சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB), 17ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வியாபாரச் சிறப்புகள் விருதுகள் 2022 இல் நிகழ்வில் வங்கிசார நிதிச் சேவைகளை வழங்கும் துறையில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவெர்டு பங்கேற்றிருந்தார். வினைத்திறன் முகாமைத்துவ சிறப்புக்கான சிறப்பு விருதையும் CDB பெற்றுக் கொண்டதுடன், ரூ 5 பில்லியன் மொத்த மூலதன முதலீட்டுக்கு அதிகமான நிறுவனங்கள் பிரிவிலும், மிகப் பாரிய பிரிவில் மொத்த வருமானம் ரூ 5 பில்லியனை விட அதிகமான வருமானத்துக்கு அதிகம் பதிவு செய்த நிறுவனங்கள் பிரிவிலும் நிறுவனம் கௌரவிப்புகளைப் பெற்றுக் கொண்டது.

பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களினால் CDB இனால் பேணப்படும் ஒழுக்கம், ஆளுகை, வியாபார செயற்பாடுகள், பொறுப்புக்கூரல், பின்தொடர்கை மற்றும் வியாபார கொள்கைகள் போன்றவற்றுக்காக கௌரவிப்புகளைப் பெற்றுள்ளது. எனவே, நாட்டினுள் வியாபார சிறப்புக்காக நிறுவனம் ஆற்றும் உயர் பங்களிப்பை பெற்றுக் கொடுக்கும் பங்களிப்புக்காக தொடர்ச்சியான 5ஆவது வருடமாகவும் CDB க்கு தேசிய வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

CDB இன் பணிப்பாளரும் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியும் பிரதம நிதி அதிகாரியுமான தமித் தென்னகோன் குறிப்பிடுகையில், “CDB இன் நிலைபேறாண்மை தந்திரோபாயம் என்பது, மதிநுட்பமான இலங்கையை கட்டியெழுப்புவது என்பதில் தங்கியுள்ளது. CDB இன் தந்திரோபாயம் மற்றும் புத்தாக்க நிறைவேற்றம் என்பதன் முக்கிய அரண்களில் ஒன்றாக நிலைபேறாண்மை அமைந்திருப்பதுடன், எமது ஒவ்வொரு பங்காளரும் இந்தத் தந்திரோபாயத்தின் உரிமையாண்மையை தமது கரங்களில் எடுத்துக் கொண்டுள்ளதுடன், அதன் விளைவாக வியாபார சிறப்புக்காக CDB ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இந்த விருது அனைத்து பங்காளர்களுக்கும் உரித்துடையது என்பதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு எமது ஆழமான நன்மதிப்பை வழங்குவதுடன், எமது நிலைபேறாண்மை தந்திரோபாயத்தை முன்நோக்கி கொண்டு செல்வதற்கு பெறுமதி வாய்ந்த வியாபார பங்காளர்களுக்கும் எமது அணியினருக்கும் பெற்றுக் கொடுக்க CDB அணி பணியாற்றும்.” என்றார்.

நடுவர் குழாமின் தலைவராக, புகழ்பெற்ற துறைசார் நிபுணர்களான சுனில் ஜி விஜேசிங்க செயலாற்றியிருந்ததுடன், கிடைத்திருந்த 100க்கும் அதிகமான விண்ணப்பதாரிகளிடமிருந்து, தந்திரோபாயம் மற்றும் தலைமைத்துவம், கூட்டாண்மை ஆளுகை மற்றும் தந்திரோபாயம், திறன் கட்டியெழுப்பல், வினைத்திறன் முகாமைத்துவம், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தை சென்றடைவு, கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு மற்றும் சூழல் நிலைபேறாண்மை, வியாபார மற்றும் நிதிப் பெறுபேறுகள் போன்ற ஏழு பிரிவுகளில் வெற்றியாளர்களைத் தெரிவு செய்திருந்தனர். 

 

NCCI இன் கௌரவ செயலாளர் காவிந்த ராஜபக்ச, தேசிய வியாபாரச் சிறப்பு விருதை, CDB இன் விநியோகத்தின் பின்னரான பின்தொடர்வை பிரதி பொது முகாமையாளர் சஞ்ஜீவ ரணதுங்கவிடம் கையளிப்பதையும், இம்பீரியல் டீஸ் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜயந்த கருணாரட்ன, CDB இன் நிலைபேறாண்மை உதவி முகாமையாளர் ஒவினி டயஸிடம் சான்றிதழை வழங்குகின்றார். 

புகைப்படத்தில் CDB இன் வியாபார அபிவிருத்தி சிரேஷ்ட முகாமையாளர் யெனர உதயங்க, CDB இன் வியாபார அபிவிருத்தி பிரதி பொது முகாமையாளர் நதீ சில்வா, NCCI இன் சிரேஷ்ட பிரதித் தலைவர் தீபால் நெல்சன், CDB இன் நிலைபேறாண்மை பிரிவின் முகாமைத்துவ பயிலுநர் வஜீஷ எதிரிசிங்க மற்றும் CDB இன் தகவல் கட்டமைப்புகளின் உதவி பொது முகாமையாளர் ரிஸ்வி கரீம் ஆகியோர் காணப்படுகின்றனர்.