CDB சிசுதிரி புலமைப்பரிசில் திட்டம் – 15 வது கட்டம்

விண்ணப்பத்தைப் Download செய்யுங்கள்

2021 ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் அல்லது க.பொ.த சாதாரணப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளுடன் சித்தியடைந்த மற்றும் பொருளாதார ரீதியாக சவால்கள் உள்ள உங்கள் மகள் அல்லது மகனுக்கான இந்த புலமைப்பரிசில் திட்டத்தில் சேர, மேலே உள்ள மாதிரி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, உதவி பொது முகாமையாளர், சந்தைப்படுத்தல் மற்றும் நிலைபேராண்மை, சிடிசன்ஸ் டிவலொப்மென்ட் பிசினெஸ் பைனான்ஸ் பி.எல்.சி, இல. 123 ஒராபிபாஷா மாவத்தை 10, கொழும்பு. என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் நகல், பாடசாலை சீருடையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான வண்ணப் புகைப்படம், அதிபரினால்
உறுதிப்படுத்தப்பட்ட பரீட்ச்சை பெறுபேறு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஒருவராயின் அது தொடர்பாக மற்றும் உங்கள் வருமானத்தை உறுதிசெய்யும் வகையில் கிராம சேவகரினால் அனுமதிப்படுத்தப்பட்ட சான்றிதழையும் இணைத்து அனுப்புங்கள்.

பெற்றோரின் 2 தொலைபேசி எண்கள் மற்றும் பெற்றோரின் வதிவிட முகவரியைக் குறிப்பிடுவது கட்டாயம் ஆகும்.

விண்ணப்பத்தைப் Download செய்யுங்கள்