தேசிய தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டுப் பணிகளுக்கான CDB இன் பங்களிப்பு ரூ. 50 மில். ஐ கடந்தது

 

தேசிய தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தும் பணிகளுக்கான சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) வழங்கியுள்ள பங்களிப்புத் தொகை ரூ. 50 மில்லியனைக் கடந்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. தேசிய சுகாதார பராமரிப்பு கட்டமைப்புக்கு பங்களிப்பு மற்றும் முடக்க காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வழங்கியிருந்த உதவிகள் போன்றவற்றினூடாக இந்தப் பணிகளுக்கு CDB தனது ஆதரவை வழங்கியிருந்தது. அதற்கமைய, சுகாதார அமைச்சுக்கு ஐந்து ஒட்சிசன் செறிவூட்டிகளை அண்மையில் அன்பளிப்புச் செய்திருந்தது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர். அசேல குணவர்தனவிடம், CDB இன் பணிப்பாளர்கள் இந்த அன்பளிப்பை கையளித்திருந்தனர். இந்த சாதனத்தின் பெறுமதி ரூ. 12.5 மில்லியனாக அமைந்திருந்தது. இந்த சாதனங்கள் அனுராதபுரத்திலுள்ள மெத்சிறிசெவண கொவிட் சிகிச்சை நிலையம், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை, பொலன்நறுவை, வெலிகந்த கொவிட் சிகிச்சை நிலையம் மற்றும் எம்பிலிபிட்டிய மற்றும் தங்காலையைச் சேர்ந்த ஆதார வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும்.

தொற்றுப் பரவல் ஆரம்பித்தது முதல், தேசிய தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தும் பணிகளுக்கு CDB இனால் வழங்கப்பட்ட பங்களிப்புகளில், தனிமைப்படுத்தல் நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு நிலையத்துக்கு ரூ. 10 மில்லியன் வழங்கப்பட்டிருந்தது. மேலும், பூஸ்ஸா கடற்படை தளத்தில் நிறுவப்பட்டிருந்த இடைத்தங்கல் பராமரிப்பு நிலையத்துக்கு ரூ. 8.8 மில்லியன் பெறுமதியான HDU கட்டில்கள், multi-parameters மற்றும் wall oxygen piping system ஆகியவற்றையும் CDB வழங்கியிருந்தது. கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ரூ. 10.2 மில்லியன் பெறுமதியான ICU monitor மற்றும் ventilator அடங்கலான மருத்துவ சாதனங்கள், கந்தானை மாவட்ட வைத்தியசாலை மற்றும் முல்லேரியாவ கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை ஆகியவற்றுக்கு ரூ. 4.1 மில்லியன் பெறுமதியான HDU கட்டில்கள் மற்றும் wall oxygen piping system ஆகியவற்றையும் CDB வழங்கியிருந்தது.

CDB அணியினரின் உள்ளங்களில் தன்னார்வ செயற்பாடு என்பது உறுதியாக காணப்படும் நிலையில், முடக்க காலப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக முழு அணியினரும் முன்வந்திருந்தமை நெகிழ வைப்பதாக அமைந்திருந்தது. நாடு முழுவதையும் சேர்ந்த தேவைகளைக் கொண்ட குடும்பத்தாருடன் தொடர்புகளை பேணி, ரூ. 8 மில்லியன் பெறுமதியான 1,500 உலர் உணவுப் பொதிகளை தனது 71 கிளை வலையமைப்பினூடாக பகிர்ந்தளித்திருந்தது.

தொற்றுப் பரவலின் தாக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கு முழுத் தேசமும் முயற்சிக்கும் வேளையில், தேசத்தின் மீட்புப் பணிகளில் பங்களிப்பு வழங்கும் பங்காளராக CDB தன்னை அர்ப்பணித்திருந்தது. குறிப்பாக முன்கள மருத்துவ சாதனங்களை வழங்கியதுடன் உட்கட்டமைப்பு வசதிகளில் முதலீடுகளை மேற்கொண்டிருந்தது.

CDB இன் உள்ளடக்கமான நிலைபேறான நிகழ்ச்சி நிரலில் நிலைபேறான பெறுமதிகள், கொள்கைகள் மற்றும் சிறந்த செயற்பாடுகள் போன்றன அதன் வியாபார செயற்பாடுகள் முன்னெடுப்படுவது, தேசத்துக்கு ஆதரவு தேவைப்படும் வைகளில் உள்ளக பங்காளராக திகழ்வது போன்றவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அந்தப் பயணத்தில் பங்காளராக திகழ்வதில் CDB தன்னை தொடர்ந்தும் அர்ப்பணித்துள்ளதுடன், ஒன்றிணைந்த தேசத்தினால் சகல தடைகளையும் தகர்க்க முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. எனவே, ஒன்றிணைந்து உறுதியாக, பிரகாசமாக மற்றும் சிறப்பாக மீண்டெழக்கூடியதாக இருக்கும்.

CDB பற்றி

இலங்கையின் சிறந்த சூழலுக்கு நட்பான பத்து நிறுவனங்களிலும், மாபெரும் வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் ஐந்தினுள்ளும் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) திகழ்கின்றது. நாடு முழுவதிலும் பரந்த கிளை வலையமைப்பினூடாக நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு இந்நாட்டில் நிதிச் சேவைகளை வழங்குகின்றது. மேலதிக தகவல்களுக்காக www.cdb.lk எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்.

படம் 1
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர். அசேல குணவர்தனவிடம், CDB இன் பணிப்பாளர்கள் ஒட்சிசன் செறிவூட்டிகளை சுகாதார அமைச்சில் வைத்து அண்மையில் அன்பளிப்புச் செய்தனர்.

 

cdb

படம் 2
CDB குழுவினர் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த இல்லேபெரும மற்றும் மயக்க மருந்து நிபுணர் வைத்திய தீபானி நந்தசேன ஆகியோருக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

cdb