CDB MasterCard கடனட்டைகளுக்கான முரண்பாடு தீர்ப்பு செயன்முறை

Q: கே. முரண்பாடு தீர்ப்புக்கு ஏதேனும் சிறுகுறிப்புகள்?

ப. உங்கள் கூற்றில் ஒழுங்கீனமான பதிவுகளை பரிசோதித்துக் கொள்ளவும். உங்கள் கடனட்டை கொடுக்கல் வாங்கல்களை கூற்றில் அல்லது CDB iControl App இல் பரிசோதித்து, வழமைக்கு மாறாக இடம்பெற்றிருக்கும் ஏதேனும் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி, உங்கள் கூற்று கிடைத்து 14 தினங்களுக்குள் CDB க்கு அறிவிக்கவும்.

Q:கே. ஒழுங்கீனமான பதிவுகள் காணப்பட்டால் என்ன செய்யப்பட வேண்டும்?

ப. 0117 121 121 (பிளாட்டினம், வேர்ள்ட்), 0117 121 122 (ஸ்டான்டர்ட், கோல்ட், டைட்டேனியம்) அல்லது cards.customercare@cdb.lk மின்னஞ்சல் ஊடாக எம்முடன் நீங்கள் தொடர்பு கொள்ளலாம், அல்லது கார்ட் சென்ரர், இல. 123, ஒரபிபாஷா மாவத்தை, கொழும்பு 10 எனும் முகவரிக்கு தபால் மூலம் தொடர்பு கொண்டு குறித்த ஒழுங்கீனமான கொடுக்கல் வாங்கல் பற்றி எமக்கு அறியத்தரலாம்.

Q: கே. வாடிக்கையாளரிடமிருந்து முறைகேடு பற்றிய அறிவித்தல் கிடைத்ததும், CDB என்ன செய்யும்?

ப. முறைகேட்டின் தன்மை மற்றும் MasterCard ஒழுங்குவிதிமுறைகளின் பிரகாரம், குறிப்பிட்ட காலப்பகுதியினுள் முறைப்பாட்டை தீர்ப்பதற்கான சகல முயற்சிகளையும் CDB மேற்கொள்ளும்.

கே. விசாரணைகள் தொடர்பில் CDB இனால் எனக்கு அறியத்தருவதற்கு எந்தளவு காலம் வரை செல்லும் மற்றும் அக்காலப்பகுதியில் எனது கடனட்டையை பயன்படுத்த முடியுமா?

ப. முறைப்பாடு கிடைத்து மூன்று வேலை நாட்களுக்குள் அதன் நிலை தொடர்பில் CDB, தனது வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை வழங்கும். மேலதிக தகவல்கள் கிடைத்த பின்னர் வழங்கப்படும். இனால் குறிப்பிடப்படாவிடின், முறைப்பாடு தீர்க்கப்படும் காலப்பகுதியில் வாடிக்கையாளரால் கடனட்டையை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். வாடிக்கையாளருக்கு அனுகூலமான வகையில் முறைப்பாடு தீர்க்கப்பட்டால், குறித்த கொடுக்கல் வாங்கல் பெறுமதி மற்றும் வட்டிப் பெறுமதியை CDB மீளச் செலுத்தும்.